தி ரீடர் (திரைப்படம்)
![]() தி ரீடர் (The Reader) என்பது ஸ்டீபன் டால்ட்ரி இயக்கிய 2008 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படமாகும். இது பெர்ன்கார்ட் சிலிங்க் என்பவர் எழுதி 1995-இல் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தை டேவிட் ஹேர் திரைக்கதையை எழுதியிருந்தார். படத்தில் கேட் வின்ஸ்லெட், ரால்ப் ஃபைன்ஸ், டேவிட் கிராஸ், புருனோ கன்ஸ் மற்றும் கரோலின் ஹெர்பர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தயாரிப்பாளர்களான அந்தோனி மிங்கெல்லா மற்றும் சிட்னி பொல்லாக் ஆகியோரின் கடைசி படம் ஆகும். அவர்கள் இருவரும் பட வெளியீட்டிற்கு முன்பே இறந்து போயினர். செப்டம்பர் 2007 இல் ஜெர்மனியில் தயாரிப்பு தொடங்கியது. மேலும் படம் டிசம்பர் 10,2008 அன்று குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டது. கதைச் சுருக்கம்இந்த படம் மைக்கேல் பெர்க் என்ற ஜெர்மன் வழக்கறிஞரின் கதையைச் சொல்கிறது. அவர் 1958 இல் 15 வயதில், ஹன்னா சிமிட்ஸ் என்ற வயதான பெண்ணுடன் பாலுறவு கொண்டுள்ளார். இந்தப் பெண் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் நாசி வதைமுகாமில் காவலாளியாக இருந்ததனால் ஏற்பட்ட போர்க் குற்றங்கள் விசாரணையில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட பின்னர் காணாமல் போகிறார். ஹன்னா கடந்தகால நாஸி ஆட்சியைக் காட்டிலும் மிக மோசமானது என்று கருதும் ஒரு ரகசியத்தை பாதுகாத்து வைத்திருப்பதை மைக்கேல் உணர்ந்துகொள்கிறார் - அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அது விசாரணையில் ஹன்னாவுக்கு உதவியிருக்கும். வெளியீடுடிசம்பர் 10,2008 அன்று தி ரீடர் திரைப்படம் 8 திரையரங்குகளில் மட்டுப்படுத்தப்பட்ட வெளியீட்டைக் கொண்டிருந்தது. மேலும், அதன் தொடக்க வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் $168,051 வசூலித்தது. இத்திரைப்படம் ஜனவரி 30,2009 அன்று பரவலாக வெளியிடப்பட்டு, உள்நாட்டுத் திரையரங்குகளில் $2,380,376 வசூலித்தது. கேட் வின்ஸ்லெட்டுக்கு அகாதமி விருது கிடைத்த வார இறுதியில், பிப்ரவரி 27,2009 அன்று 1,203 திரையரங்குகளில் படம் பரவலாக வெளியிடப்பட்டது. மொத்தத்தில், இந்த படம் உள்ளூரில் $34,194,407 ம் மற்றும் உலகளவில் $108,901,967 ம் வசூலித்துள்ளது.[3] இத்திரைப்படம் அமெரிக்காவில் டிவிடி வடிவில் ஏப்ரல் 14,2009 அன்று டிவிடிவெளியிடப்பட்டது. மேலும் புளூ-ரேயில் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டது.[4] இரண்டு பதிப்புகளும் இங்கிலாந்தில் மே 25,2009 அன்று வெளியிடப்பட்டன.[5] ஜெர்மனியில் இரண்டு டிவிடி பதிப்புகள் (ஒற்றை வட்டு மற்றும் 2-வட்டு சிறப்பு பதிப்பு) மற்றும் புளூ-ரே ஆகியவை 2009 செப்டம்பர் 4 அன்று வெளியிடப்பட்டன.[6] விருதுகள்வின்ஸ்லெட்டும் இளம் மைக்கேலாக நடித்திருந்த டேவிட் கிராஸூம் அவர்களுடைய நடிப்பிற்காக நிறைய பாராட்டுதல்களைப் பெற்றனர். இந்தத் திரைப்படத்தில் தனது பாத்திரத்திற்காக வின்ஸ்லெட் பாராட்டுதலைப் பெற்றார் என்பதோடு சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது, சிறந்த நடிகைக்கான பாஃப்தா விருது, சிறந்த துணை நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது மற்றும் 81வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகைக்கான அகாதமி விருது ஆகியவற்றையும் வென்றார். இந்தத் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாடமி விருது உட்பட மற்ற முக்கியமான விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. விமர்சனம்சில திரை விமர்சகர்கள் சிமிட்ஸை பார்வையாளர்களின் அனுதாபத்தின் ஒரு பொருளாக மாற்றியமைத்ததற்காக விமர்சித்தனர். மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யூத எதிர்ப்பு சதி கோட்பாட்டுத் திருத்தவாதத்திற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia