தீவாசு மக்களவைத் தொகுதி
தீவாசு மக்களவைத் தொகுதி (Dewas Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, சாஜாபூர் தொகுதி நீக்கப்பட்டு தீவாசு மக்களவைத் தொகுதி உருவானது.[2][3] இந்தத் தொகுதி செகோர், சாஜாபூர், அகர் மால்வா மற்றும் தேவாஸ் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாக உள்ளது. மே 2019 முதல், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மகேந்திர சோலங்கி உள்ளார். சட்டமன்றப் பிரிவுகள்தற்போது, தீவாசுஸ் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
அகர், சாஜாபூர், சுஜல்பூர், தீவாசு, சோன்காட்ச் மற்றும் காட்பிப்லியா சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முந்தைய சாஜாபூர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தன. அசுடா பிரிவு முன்பு போபால் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்2024
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia