துன் சம்பந்தன் சாலை

துன் சம்பந்தன் சாலை
Jalan Tun Sambanthan
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு கோலாலம்பூர் மாநகர் மன்றம்
நீளம்:1 km (0.62 mi)
பயன்பாட்டு
காலம்:
1982 –
வரலாறு:அமரர் துன் சம்பந்தன் நினைவாக
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கோலாலம்பூர்
கோலாலம்பூர் மத்திய சந்தை
முடிவு:பிரிக்பீல்ட்ஸ் தென் பகுதி
ஜாலான் சையட் புத்ரா
ஜாலான் செங் லோக்
ஜாலான் ஹங் கஸ்தூரி
கோலாலம்பூர் மிடல் ரிங் சாலை
ஜாலான் திரேவர்ஸ்
ஜாலான் சையட் புத்ரா
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கோலாலம்பூர்


துன் சம்பந்தன் சாலை என்பதை மலாய் மொழியில் ஜாலான் துன் சம்பந்தன் என்று அழைக்கிறார்கள். மலேசியாவின் பல இடங்களில் அமரர் துன் வீ. தி. சம்பந்தன் அவர்களின் பெயர் சாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. அவற்றுள், கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இருக்கும் துன் சம்பந்தன் சாலையே மிகவும் புகழ் பெற்றதாகும். இங்குள்ள இதர துணைச் சாலைகளுக்கும் துன் சம்பந்தன் சாலை 2, துன் சம்பந்தன் சாலை 3, துன் சம்பந்தன் சாலை 4 என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

துன் சம்பந்தன், மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவியை வகித்தவர். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார். தம்முடைய குடும்பச் சொத்துகளை, மலேசிய இந்திய மக்களுக்காகத் தானம் செய்த மாமனிதர்.

1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன், தம்முடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். முழு அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு, அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.

பின்னணி

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இருக்கும் துன் சம்பந்தன் சாலையில் இளம் ஆண்கள் கிறிஸ்துவ சங்கம் இருக்கிறது. அழகிய விவேகானந்தா ஆசிரமும் இங்குதான் உள்ளது. இந்த ஆசிரம்மம் 1904ல் கட்டப்பட்டது.[1] சுவாமி விவேகானந்தர் 1893இல் மலாயாவிற்கு வருகை புரிந்தார். அவர் நினைவாக இந்த ஆசிரமம் கட்டப்பட்டது.[2] கோலாலம்பூர் செண்ட்ரல் (மலாய்: KL Sentral) எனும் கோலாலம்பூர் தொடர்வண்டி மையம், டாயாபூமி, பங்சார் சாலை போன்றவற்றை துன் சம்பந்தன் சாலை இணைக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளின் பெயர்கள்

பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில், ஒரு பிரதான சாலைக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் வங்கிகளும், வழக்கறிஞர்களின் அலுவலகங்களும் உள்ளன. ஜொகூர் மாநிலத்தில் மாசாய் நகரிலும் துன் சம்பந்தன் பெயரில் ஒரு சாலை இருக்கிறது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன. கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள அதி விரைவு ரயில் சேவை மையத்திற்கு LRT Tun Sambanthan என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.

சாலைகளின் பெயர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya