கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 அல்லது மலேசிய கூட்டரசு சாலை 28 (ஆங்கிலம்: Malaysia Federal Route 28; அல்லது Kuala Lumpur Middle Ring Road 2 (MRR2); மலாய்: Laluan Persekutuan Malaysia 28 அல்லது Jalan Lingkaran Tengah 2 Kuala Lumpur) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம்; மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகிய இரு மாநிலப் பகுதிகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள சுற்றுப்புறங்களை இணைக்க மலேசிய பொதுப்பணித் துறை (ஜேகேஆர் - JKR) கட்டிய ஒரு வட்டச் சாலை ஆகும்.[1] 65.0 கிமீ (40.4 மைல்) நீளம் கொண்ட இந்த வட்டச்சாலையை, மலேசிய கூட்டரசு சாலை 28; அந்த மூன்று சாலைகளில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மலேசிய கூட்டரசு சாலை 28 ஆகும். ஏனென்னில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் மூன்றில் இரண்டு பாகம் மலேசிய கூட்டரசு சாலை 28-இன் பகுதியாகும். பொதுகோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் 0 கிலோமீட்டர் என்பது செரி டாமன்சாரா மாற்றுச் சாலையில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் முதல் கிலோமீட்டர், மலேசிய கூட்டரசு சாலை 54, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (Damansara–Puchong Expressway) மற்றும் டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) ஆகிய விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கெப்போங் மேம்பாலம் (Kepong Flyover) கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-ஐ, மலேசிய கூட்டரசு சாலை 54-இல் இருந்து திசை திருப்புகிறது. கோம்பாக்கில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மீண்டும் மலேசிய கூட்டரசு சாலை 2-யைச் சந்தித்து, மேல் அடுக்குச் சாலை வழியாகக் கடந்து செல்கிறது. கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மலேசிய கூட்டரசு சாலை 28; ஆகிய இரு சாலைகளும், செரி பெட்டாலிங் மாற்றுச் சாலையில் (Sri Petaling Interchange) முடிவடைகின்றன. அங்கு அவை சா ஆலாம் விரைவுச்சாலையாக (Shah Alam Expressway) மாற்றம் காண்கின்றன. வரலாறுகோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தக் கட்டங்கள்:
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் RM 880 மில்லியன் செலவில், 12 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தத் திட்டம் மலேசிய பொதுப்பணித் துறை மற்றும் பூமி நெடுஞ்சாலை நிறுவனம் (Bumi Hiway Sdn Bhd) ஆகிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது. முன்னோடி பாதைகள்கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானமானது; பின்வரும் பல முக்கியச் சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது:[2]
காட்சியகம்![]() விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia