கூச்சாய் லாமா சாலை
கூச்சாய் லாமா சாலை அல்லது கூச்சாய் லாமா நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kuchai Lama Road; மலாய்: Jalan Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை ஆகும். கோலாலம்பூரின் பழமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாக அறியப்படுகிறது.[1] இருப்பினும், அண்மைய காலங்களில் இந்தச் சாலை மறுசீரமைக்கப்பட்டு ஒரு விரைவுச்சாலைத் தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சாலை, கோலாலம்பூர் மாநகராட்சி (Dewan Bandaraya Kuala Lumpur) (DBKL) எனும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகிறது. பொதுஆகஸ்டு 2004-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு, சனவரி 2008-இல் நிறைவடைந்தது. புதிய சாலைப் பரிமாற்ற இணைப்புகள் 28 பிப்ரவரி 2008 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன. 2010-களில், பந்தாய் புதிய விரைவுச்சாலை மற்றும் சுங்கை பீசி விரைவுச்சாலை ஆகிய விரைவுச்சாலைகளை இணைக்கும் வகையில், ஐஜேஎம் நிறுவனம் (IJM Corporation), சிறப்புச் சரிவுப் பாதைகளை உருவாக்கியது. பந்தாய் புதிய விரைவுச்சாலைபந்தாய் புதிய விரைவுச்சாலை 30 ஏப்ரல் 2004-இல் திறக்கப்பட்ட இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை, கிள்ளான் லாமா சாலை, பந்தாய் டாலாம் சாலை என முன்பு அறியப்பட்டது.[3] காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia