புக்கிட் பிந்தாங் சாலை
புக்கிட் பிந்தாங் சாலை (ஆங்கிலம்: Bukit Bintang Road); (மலாய்: Jalan Bukit Bintang) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பிரபலமான சாலை ஆகும். புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள்; மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள்; மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[1] பொதுமலேசியாவில் 'கணினிப் பொருட்களின் சொர்க்கம்' எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங் வணிக வளாகத்திற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[2][3] 2021 சூன் மாதம், கோலாலம்பூர் மாநகராட்சி, புக்கிட் பிந்தாங் சந்திப்பில் சிபுயா பாணியிலான பாதசாரிக் கடவையை (Shibuya-style pedestrian crossing) உருவாக்கியது. கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாள நிலையத்திற்கு (KL Monorail Line) கீழ், இந்தப் பாதசாரிக் கடவை அமைந்து உள்ளது. இதற்கு பிந்தாங் நடைபாதை என்று பெயர்.[4][5] சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia