துளசி கிரி
துளசி கிரி (Tulsi Giri, நேபாளி: तुलसी गिरि 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2] 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3] 1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[4][5] மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர். துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார். 1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார்.[6][7][8] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia