சிராஹா மாவட்டம்![]() சிராஹா மாவட்டம் ( Siraha District) (நேபாளி: सिराहा जिल्लाⓘ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிராஹா நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். சாகர்மாதா மண்டலத்தில் அமைந்த மாவட்டங்களுள் ஒன்றான இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,188 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 6,37,328 ஆகும். புவியியல் மற்றும் தட்ப வெப்பம்சிராஹா மாவட்டம் தராய் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கும் கீழிலிருந்து 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் பகுதிகள் என இரண்டு காலநிலைகளில் காணப்படுகிறது. [1] கிராம வளர்ச்சி மன்றங்கள்![]() சிராஹா மாவட்டம் 100 கிராம வளர்ச்சி மன்றங்களையும், ஆறு நகராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia