தெரக்கு உள்ளான்
தெரக்கு உள்ளான் (Terek Sandpiper; Xenus cinereus) 24 செ.மீ. மெல்லிதாக நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கம் அலகும். மஞ்சள் நிறக் கால்களும் கொண்டது. முகத்தின் பக்கங்களிலும் பின் கழுத்திலும் பழுப்புக் கோடுகள் இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பு நிறம் பின் கீழ்ப்பகுதியும் வெள்ளை நிறம். காணப்படும் பகுதிகள்ஆகத்து மாதத்தில் தமிழ் நாட்டுக்கடற்கரை சார்ந்த பகுதிகளுக்கு வலசை வரத் தொடங்கும். நன்னீர் நிலைகளில் அரிதாகவே காணக்கூடியது. கடற்கரை, சதுப்பு நிலங்கள், கரையோர உப்பங்கழிகள், ஆற்றுக் கழிமுகம் ஆகிய பகுதிகளிள் காணப்படும். உணவு10 முதல் 15 வரையான பறவைகள் சிறு குழுவாக சிறு நத்தைகள், பூச்சிகள் ஆகியனவற்றை இரையாகத் தேடித் தின்னும். இவ்வாறு இரை தேடும் போது புதை மணலில் அலகினைக் கண்வரை உள்ளே செல்லும்படி நுழைக்கும் பழக்கம் உடையதாகையால் கீழ் அலகை ஒட்டியபகுதியும் மோவாயும் தூவிகளற்றுக் காணப்படும். பிடிக்கும் இரையைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பின் விழுங்கும் பழக்கமும் இதனிடம் உள்ளது. அலை ஏற்றத்தின் போது உயர்ந்த மணல் திட்டுகளின் மீதோ பாறைகளின் மீதோ ஒற்றைக் காலில் நிற்கக் காணலாம். சதுப்பு நிலக்காடுகளில் மேயும் பறவைகள் மரங்களில் உயர அமர்ந்து ஓய்வு கொள்ளும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia