தேங்காய் சுடும் விழாதேங்காய் சுடும் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடி 1 அன்று குறிப்பாக காவிரி, அமராவதி உள்ளிட்ட பல ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும். நம்பிக்கைபொதுவாக புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு நல்ல எண்ணங்களை விதைத்து சுவையான வாழ்வினைத் தொடங்கவும், விவசாயம் செழிப்பாக அமையவும், செல்வம் பெருகவும், ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.[1] தேங்காய் சுடும் முறைமுற்றிய தேங்காயின் கண்களைத் திறந்து அதிலுள்ள நீரை அகற்றிய பின்னர் பொட்டுக்கடலை, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் இந்த தேங்காயை சொருகி தீயில் வாட்டி, சுட்டு பின் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.[1] தேங்காயை உரித்து சுத்தம் செய்து மஞ்சள் தடவி, துளையிட்டு, அதில் உள்ள தேங்காய்நீரை எடுத்ததும், ஊறவைத்த பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பொட்டுக்கடலை, எள், வறுத்த பாசிப்பருப்பு போன்றவற்றை அரைத்து அதனைத் தேங்காயில் போட்டு சுடுவதும் உண்டு. பிரசாதமாக தங்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.[2] நடைபெறும் இடங்கள்கரூர் (கரூர் மாவட்டம்) [1] சேலம்,[3] மேட்டூர்,[4] ஈரோடு,[5] நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம்[6] உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia