தோரியம் ஆக்சலேட்டு
தோரியம் ஆக்சலேட்டு (Thorium oxalate) என்பது C4O8Th என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வலிமை குறைந்த அமிலத்திலுள்ள தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்ப்பதன் மூலமாக தோரியம் ஆக்சலேட்டைத் தயாரிக்க முடியும். அறை வெப்பநிலையில், 0.5 மோலார் தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் 0.5 மோலார் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்க்கும் போது தோரியம் ஆக்சலேட்டு இருநீரேற்று ( Th(C2O4)2.2H2O ) உருவாகிறது. இவ்வாறே 2 மோலார் நைட்ரிக் அமிலக் கரைசலுடன் வினைபுரிந்து வீழ்படிவாகும் போது தோரியம் ஆக்சலேட்டு அறுநீரேற்று உருவாகிறது. தோரியம் ஆக்சலேட்டை 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது தோரியம் ஆக்சைடாக மாறுகிறது[1]. தோரியம் ஆக்சலேட்டின் கரைதிறன் பெருக்க மாறிலி மதிப்பு 5.01 X 10−25 மற்றும் நீரிலி வடிவ தோரியம் ஆக்சலேட்டின் அடர்த்தி 4.637 கி/செ.மீ3.ஆகும்[2] Density of anhydrous thorium oxalate is 4.637 g/cm3. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia