தோரியம் ஈரயோடைடு
தோரியம் ஈரயோடைடு (Thorium diiodide) என்பது ThI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தோரியத்தின் அயோடைடு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. Th4+(I-)2e-2 என்ற அயனி வாய்பாட்டால் குறிக்கப்படும் ஓர் எலக்ட்ரைடும் காற்று உணரியுமாகும்..[3] தயாரிப்புதோரியம்(IV) அயோடைடுடன் விகிதவியல் அளவில் தோரியத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் தோரியம் ஈரயோடைடு உருவாகும்:[3][4]
தோரியம் மற்றும் அயோடின் தனிமங்களை நேரடியாக வினைபுரியச் செய்தும் தோரியம் ஈரயோடைடு தயாரிக்கலாம்:[4]
தோரியம் மூவயோடைடை 550 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி சிதைவு வினைக்கு உட்படுத்தினாலும் கூட தோரியம் ஈரயோடைடு உருவாகும்:[4]
பண்புகள்சீரியம், பிரசியோடைமியம் மற்றும் கடோலினியம் ஆகியவற்றின் ஈரயோடைடுகளைப் போலவே இதுவும் உலோகத் தங்கப் பளபளப்பு மற்றும் அதிக மின் கடத்துத்திறன் கொண்டதாகும்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia