தோரியம் டெட்ராபுளோரைடு
தோரியம் டெட்ரா புளோரைடு (Thorium(IV) fluoride) (ThF4) ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். இது வெண்மை நிறம் உடைய, நீர் உறிஞ்சும் திறன் உடைய துாளாகும். இச்சேர்மத்தை தோரியத்தை புளோரின் வாயுவுடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். 500 °செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையில், இது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துடன் வினைப்பட்டு ThOF2 ஐத் தருகிறது.[1] பயன்கள்இச்சேர்மம் மிதமான கதிரியக்கத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கூட பல அடுக்குகளைக் கொண்ட ஒளியியல் கருவிகளில் பிரதிபலிப்பிற்கு எதிரான பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் அசாதாரணமான ஒளியியல் ஊடுருவுதன்மையைக் கொண்டுள்ளது. அதன் வீச்சு 0.35–12 மைக்ரோ மீட்டர், ஆகும். இதன் கதிர்வீச்சானது ஆல்ஃபா துகள்களால் ஆனவையாக இருப்பதால் அவை வேறு ஒரு பொருளால் ஆன மெல்லிய அடுக்கு உறையினால் தடுக்கப்பட்டு விடலாம்.[2][3] தோரியம் புளோரைடானது கார்பன் பிறை விளக்குகளில் (மின்பொறி விளக்கு) பயன்படுத்தப்பட்டது. இது திரைப்பட வீழ்த்தி மற்றும் தேடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட விளக்குகளிலும் அதிக அடர்த்தி கொண்ட ஒளிர்வைக் கொடுத்தது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia