த பிரஸ்டீஜ் (திரைப்படம்)
த பிரஸ்டீஜ் (The Prestige) 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.கிறிஸ்டோபர் நோலன், ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டேவிட் போவி, பிபர் பெராபோ, ஆண்டி செர்கிஸ், ரெபெக்கா ஹால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை கிறிஸ்டோபர் பிரீஸ்ட்யின் அதே பெயரிலான புதினத்தை தழுவி எழுதப்பட்டது. திரைக்கதை கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜோனதன் நோலன் ஆகியோரால் எழுதப்பட்டது. இத்திரைப்படம் அக்டோபர் 20, 2006 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. கதை :ராபர்ட் அஞ்சியர் மற்றும் ஆண்ட்ரூ பெர்டன் தொழில் முறை மாய வித்தைகாரர்கள் ஆக இருக்கும் இந்த இருவருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் உண்டாகிறது. ஒரு எதிர்பாராத விபத்தால் ராபர்ட் அவர் நேசித்த பெண்ணை இழந்துவிட அதற்காக ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டுகிறார். பின்னர் தனியே பிரிந்து தொழில் முறை மாயாஜால வித்தகர்களாக கிரேட் டேன்டன் மற்றும் புரோஃபோசர் என்ற புனைபெயரில் இவர்கள் பெரும் புகழும் அடைந்தாலும் பழிவாங்கும் உணர்வால் ஒருவரை ஒருவர் வலிக்கும்படி விபத்துகளை உண்டாக்கி தாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றும் இடம் விட்டு இடம் மாற வைக்கும் மாயாஜலத்தை எப்படி செய்வது என்ற ரகசியத்தை பெற ராபர்ட் முயற்சி செய்கிறார். ஆண்ட்ரூவை பயமுறுத்தி இந்த ரகசிய மாய வித்தை எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளும் இவர் பின்னர் நிகோலா டெஸ்லா என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவரை சந்திக்கிறார். டெஸ்லா ஒரு காலம் சார்ந்த மாய சாதனத்தை பரிசோதித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ராபர்ட் ஒரு தண்ணீரில் மூழுகும் வித்தையை செய்யும்போது தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்து போகிறார். அங்கே எதிர்பாராமல் வந்த ஆண்ட்ரூ கொலைக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார். சிறையில் இருக்கும்போது ஆண்ட்ரூ இறந்து புதைக்கப்பட்ட ராபர்ட்டை மறுமுறை உயிரோடு காண்கிறார் ஆனால் அவரால் உண்மையை நிரூபிக்க முடியாமல் தண்டனையை ஏற்று கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஆண்ட்ரூ என்பது ஒரு தனிப்பட்ட மனிதர் இல்லை என்றும் நன்கு மாய வித்தைகளை செய்து காட்ட தெரிந்த அண்ணன் மற்றும் தம்பி இவர்கள் என்றும் மேலும் ஆண்ட்ரூ மற்றும் ஆண்ட்ரூ என்று ஒரே பெயரை உடைய இருவர் என்றும் இப்போது செய்யாத குற்றத்துக்கு மரண தண்டனையில் இறந்ததை இளையவர் என்றும் ராபர்ட் தெரிந்து கொள்கிறார். மிகவும் கோபத்தில் அவருடைய இளையவர் ஆண்ட்ரூ என்ற சொந்த தம்பியை இழந்த மூத்தவர் ஆண்ட்ரூ இப்போது கோபமாக ராபர்ட்டை தாக்கி அவரை கொலை செய்கிறார். பின்னாளில் ஒரு இடத்தில் மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றுவதை இந்த மாய வித்தை காரர்கள் எப்படி செய்தார்கள் என்பதை கதையில் முடிவில் சொல்லப்படுகிறது. ஆண்ட்ரூ மற்றும் ஆண்ட்ரூ இரட்டை சகோதரர்களாக இருந்ததால் மேலும் இது மக்கள் யாருக்கும் தெரியாது என்பதால் இந்த மாய வித்தை செய்யும்போது ஒரு கதவில் அண்ணன் மறையும்போது இன்னொரு கதவு வழியாக தம்பி வெளிப்படுவார். ஆனால் மக்கள் ஒரே மனிதர்தான் ஒரு இடத்தில் மறைந்து மறு இடத்தில் தோன்றுவதாக நினைப்பார்கள். ஆனால் ராபர்ட் கதை வேறு.. டெஸ்லா கண்டுபிடி த்த அந்த சாதனம் ராபர்ட் போலவே இன்னொரு நகலை ஒரு நொடியில் மின்சாரம் கொண்டு உருவாக்கிவிடும். இதனால் நிறைய ராபர்ட்கள் உருவாக வாய்ப்பு இருப்பதால் ஒரு ஒரு முறை புதிய ராபர்ட் உருவாகும்போது பழைய ராபர்ட் மேடைக்கு அடியில் இருக்கும் தண்ணீரில் தள்ளப்பட்டு மூச்சு திணறி இறந்துவிடுவார், இதனால் எப்போதும் மக்கள் பார்வைக்கு ஒரு ராபர்ட் மட்டுமே தெரிவார். இறுதியில் ஆல்பிரட் அவருடைய இளையவரின் மகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ராபர்ட்ன் நகல்களில் ஒரு ராபர்ட் மறுமுறை ஒரு நகலாக உயிரோடு வருகிறார். கதாப்பாத்திரங்கள்
தயாரிப்புபடமாக்கல்திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்டோபர் பிரீஸ்டினை அனுகி அவரது த பிரஸ்டீஜ் புதினத்தை படமாக்க கேட்டனர். பிரீஸ்ட் நோலனின் பால்லோவிங் மற்றும் மெமன்டோ படங்களைப் பார்த்து மயங்கிப்போனார்.[2] மேலும் வேலரீ டீன் இப்புதினத்தை நோலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.[3] அக்டோபர் 2000, நோலன் இங்கிலாந்திற்கு சென்று தன் மெமன்டோ படத்தினை வெளியிட சென்றார். அங்கு நோலன் பிரீஸ்டின் புதினத்தைப் படித்து தன் சகோதரருடன் பகிர்ந்தார். த பிரஸ்டீஜ்யின் தயாரிப்பு துவங்கியது.[4] 2001 இல், நோலன் தனது இன்சாம்னியா திரைப்பட தயாரிப்பில் மூழ்கினார் ஆதலால் திரைக்கதை எழுதுவதை தன் சகோதரரிடன் ஒப்படைத்தார் .[4] நோலன் சகோதரர்கள் திரைக்கதை எழுத ஐந்து வருடங்களாயிற்று.[3][5] பிரீஸ்ட் திரைக்கதையினை பார்வையிட்டு பாராட்டினார்.[3] ![]() நோலன் 2003இல் பேட்மேன் பிகின்ஸ் படமெடுத்தலில் மூழ்கினார்.[7][8] பேட்மேன் பிகின்ஸ் பெளியிடப்பட்டப் பின்னர் இத்திரைப்படத்தில் களமிறங்கினார். அக்டோபர் 2005இல் படத்தில் நடிக்க ஹூக் ஜாக்மன் மற்றும் கிரிஸ்டியன் பேல் ஆகியோரிடம் பேசினார்.[9] படமாக்கல் ஏப்ரல் 9 2006 அன்று முடிவடைந்தது.[10] கிரௌலி பத்தொன்பதாம் நூற்றாண்டு இலண்டன் மாதிரியான இடத்தை கண்டுபிடிக்க மொத்தம் எழுபது இடங்களை ஆராய்ந்தார்.[6] ஜோனதன் நோலன் கொலராடோவிற்கு சென்று நிகோலா டெஸ்லா பற்றி ஆராய்ச்சி செய்தார். டெஸ்லா செய்த பரிசோதனைகளை திரைப்படத்திற்கு பயன்படுத்தினார்.[4] டெஸ்லாவின் கண்டுபிடிப்பு காட்சிகளை நேதன் கிரௌலி வடிவமைத்தார்; மவுன்ட் வில்சன் ஆராச்சிக்கூடத்தின் வாகன நிறுத்தகத்தில் இக்காட்சிகள் படமெடுக்கப்பட்டன.[6] கிரௌலி மாய அரங்குகளுக்கு லாஸ் ஏஞ்சலஸ்சின் நாடக மாவட்டதில் நான்கு இடங்களை பயன்படுத்தினார்.[11] கொலராடோவிலுள்ள ஆஸ்கூட் அரண்மனையில் படமெடுக்கப்பட்டது.[12] நோலன் இத்திரைப்படத்திற்காக ஒரே ஒரு செட்டினை மட்டுமே பயன்படுத்தினார்.[13][14] மேலும் நோலன் இயற்கை பெளிச்சத்தில் மட்டுமே படமெடுத்தார்.[15] திருத்தல், இசையமைப்பு ஆகியவை செப்டம்பர் 22, 2006 அன்று முடிவடைந்தது.[10][16] விருதுகள்பரிந்துரைக்கப்பட்டவை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia