சூலை 16 2008 இல் இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
கிரிஸ்டியன் பேல்: பாட்மான்/புரூஸ் வெய்ன், கோடீஸ்வரர், கதையின் நாயகர். காத்தம் (Gotham) நகரின் குற்றவாளிகளுக்கு எதிராக சண்டை போடுகிறார். காத்தம் மக்களுக்கு பாட்மானும் புரூஸ் வெய்னும் ஒன்று என்று தெரியாது. இத்திரைப்படத்தின் முன்வந்த பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்திலும் கிரிஸ்டியன் பேல் பாட்மான் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹீத் லெட்ஜர்: ஜோக்கர், குற்றவாளி, திரைப்படத்தின் முக்கிய கெட்டவன். முகத்தில் கோமாளி வேடம் போட்டு காத்தம் நகரில் குற்றங்கள் செய்கிறார்.
ஏரன் எக்ஹார்ட்: ஹார்வி டென்ட்/டூ-பேஸ், மாவட்ட வழக்கறிஞர் (District Attorney). காத்தமின் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுகிறார்.
மார்கன் ஃபிரீமன்: லூசியஸ் பாக்ஸ், புரூஸ் வெய்னின் "வெய்ன் எண்டர்பிரைஸஸ்" நிறுவனத்தின் தொழிலதிபர். பாட்மான் பயன்படுகிற பாட்மொபீல் (Batmobile) வண்டி, ஆயுதங்கள், கருவிகளை தயார்செய்கிறார்.
மேகி ஜிலன்ஹால்: ரேச்சல் டாஸ், துணை மாவட்ட வழக்கறிஞர். இளமையில் புரூஸ் வெய்னின் தோழி. பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்தில் கேட்டி ஹோம்ஸ் இந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கேரி ஓல்ட்மன்: ஜேம்ஸ் கோர்டன், காவல்துறை ஆணையர். காத்தம் நகரில் ஊழல் செய்யாத காவல்துறையினர்களில் ஒன்றாவார்.
மைக்கேல் கேன்: ஆல்ஃபிரெட், புரூஸ் வெய்னின் பரிசாரகர்.
திரைப்பட நிபுணர்களும் இத்திரைப்படத்தை பாராட்டுகின்றனர்; 246 விமர்சனங்களில் 94% இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளனர் என்று ராட்டன் டோமேட்டோஸ் இணையத்தளம் கூறியுள்ளது. இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர்களால் வாக்கு செய்து வரலாற்றில் முதலாம் மிகச்சிறந்த திரைப்படம் என்று சில நாளாக இருந்தது.