நர்கிசு
நர்கிஸ் தத் (Nargis Dutt, நர்கிஸ் தத், Urdu: نرگس, Hindi: नर्गिस; 1 சூன் 1929 – 3 மே 1981), ஒரு புகழ் பெற்ற பாலிவுட் (இந்தி) நடிகை ஆவார். இவர் பிரபல இந்தி நடிகர் அன்வர் ஹுசைனின் சகோதரி ஆவார். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் தமன்னா. முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான மதர் இந்தியா படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் ஆர் தின் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.[1] கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981 தஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1] இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[2] நர்கிஸை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசு "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை 'நர்கிஸ் விருது' என இவர் பெயரில் வழங்கி வருகிறது.[3] சான்றுகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia