காவல் கோட்டம்
காவல் கோட்டம், 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். இது எழுத்தாளர் சு. வெங்கடேசனால் எழுதப்பட்டது. கதைக்களம்2011-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சிக் களத்தில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்தப் புதினம் மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தில் நடைபெறுவதாக அமைகிறது. தெலுங்கு நாயக்கர்களும், கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாவல். இது தவிர ஆங்காங்கே மதுரை நகரின் வரலாற்றைக் கூறுவது போலவும் உள்ளது. தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது. காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[2]
விமர்சனங்கள்இந்த நூலில் இவர் கையாண்ட வரலாற்றுக் குறிப்புகள் பல வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக்குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. இப்புதினத்தை ஆதரித்து எழுத்தாளர் ஜெயமோகனும்[3] எதிர்த்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும்[4][5] எழுதியுள்ளனர். மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia