உத்தமபாளையம்உத்தமபாளையம் (ஆங்கிலம்:Uthamapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி - கம்பம் சாலையில் உள்ளது. உத்தமபாளையம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,508 வீடுகளும், 29,050 மக்கள்தொகையும் கொண்டது.[1] இது 9 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2] பொருளாதாரம்கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை, கரும்பு ஆகியன பயிரிடப்படுகின்றன. கோயில்இந்த ஊரில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் காளாத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கல்லூரிகள்
சிறப்புகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia