நிசாபூர்நிசாபூர் (ஆங்கிலம்: Nishapur) அல்லது நிஷாபூர் என்பது வடகிழக்கு ஈரானின் கொராசான் ராசாவி மாகாணத்தில், உள்ள ஒரு நகரம், நிஷாபூர் மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் கோரசன் மாகாணத்தின் முன்னாள் தலைநகரமும் ஆகும்.[1] ஈரானின் பினாலுட் மலைகளின் அடிவாரத்தில் வளமான சமவெளியில் இந்நகரம் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நகரின் மக்கள் தொகை 239,185 பேர் என்றும் இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 433,105 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக பச்சைநீலக் கற்களை உலகிற்கு வழங்கிய பச்சைநீலக் கற்சுரங்கங்கள் அருகில் உள்ளன. இந்த நகரம் மூன்றாம் நூற்றாண்டில் முதலாம் சாபூரால் ஒரு சாசானியத் தலைநகராக நிறுவப்பட்டது. நிசாபூர் பின்னர் தாகிரிட் வம்சத்தின் தலைநகராக மாறியது மற்றும் 830 இல் அப்துல்லா தாகிரால் சீர்திருத்தப்பட்டது, பின்னர் செல்யூக் வம்சத்தை நிறுவியவரான துக்ரிலால் இந்நகரம் தலைநகராக 1037 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்பாசியக் கலீபக காலத்திலிருந்து குவாரெசுமியா மற்றும் கிழக்கு ஈரானின் மங்கோலிய படையெடுப்பு வரை, இந்த நகரம் இஸ்லாமிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார, வணிக மற்றும் அறிவுசார் மையமாக உருவெடுத்தது. நிசாபூர், மெர்வ், ஹெறாத் மற்றும் பல்கு ஆகியவற்றுடன் குராசானின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாகவும் மற்றும் நடுக்காலத்தின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாகவும், கிழக்கில் கலிபாவின் அரசாங்க அதிகாரத்தின் இருக்கையாகவும், பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களுக்கான குடியிருப்பு இடமாகவும், திரான்சாக்சியானா மற்றும் சீனா, ஈராக் மற்றும் எகிப்திலிருந்து வணிக வழிகளில் ஒரு வர்த்தக நிறுத்தமாகவும் இருந்துள்ளது.. நிஷாபூர் பத்தாம் நூற்றாண்டில் சமானித்துகளின் கீழ் அதன் செழிப்பின் உச்சத்தை எட்டியது, ஆனால் 1221 இல் மங்கோலியர்களால் அந்நகரின் மொத்த மக்கள்தொகையும் அழிக்கப்பட்டது. இந்தப் படுகொலையும் அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களும் மற்றும் பிற படையெடுப்புகளும் இந்த நகரத்தின் பெருமை பெற்ற மட்பாண்டத் தொழிலலை அழித்துவிட்டதாக நம்பப்படுகிறது. வரலாறுநிசாபூர் சாசானிய வம்சத்தின் போது நிறுவப்பட்டது மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் இது தாகிரிட் வம்சத்தின் தலைநகராக மாறியது மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் சமானித் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தக் காலத்தில் நகரம் ஒரு முக்கியமான மற்றும் வளமான நிர்வாக மையமாக மாறியது. 1037 இல், இது செல்யூக் அரசர்களால் கைப்பற்றப்பட்டது. 1153 இல் ஓகுஸ் துருக்கியர்களால் தாக்கப்பட்டும், பல பூகம்பங்களை சந்தித்த போதிலும், நிசாபூர் 1221 இல் செங்கிஸ் கான் மற்றும் மங்கோலியர்களால் அழிக்கப்படும் வரை ஒரு முக்கியமான நகர மையமாகத் தொடர்ந்ததிருந்தது.[2] வரலாற்றுக்கு முந்தைய மற்றும் தொல்பொருள் காலம்இந்த பரந்த மற்றும் சிக்கலான தளத்தில் சிறியளவில் தொல்பொருள் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் வேறு எந்த நகரத்தையும் விட அதிகமுறை அழிக்கப்பட்டும் மீண்டும் கட்டப்பட்டும் உள்ள நகரம் நிஷாபூர் என்று புள்ளிவிவர ரீதியாக உண்மையா இல்லையா என்று உறுதிப்படுத்தாத தூண்டும் நோக்குடைய கருத்தை ஜார்ஜ் கர்சன் குறிப்பிட்டுள்ளார்,[3] பெருநகர கலை அருங்காட்சியகம் 1935 முதல் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது, அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தத் தக்க பொருட்தளைத் தேடிச் செய்யப்பட்ட அந்த ஆய்வுகள் அந்த நகரின் புகழ்பெற்ற சிறுமட்பாண்டங்கள் மட்டுமே கிடைத்தபின், 1940 இல் நிறுத்தப்பட்டன. இடைக்காலம்அனடோலியாவையும் மத்தியதரைக் கடலையும் சீனாவுடன் இணைத்த பழைய பட்டுச் சாலையில் நிசாபூர் ஒரு முக்கியமான நிலையை வகிக்கிறது. பட்டுச் சாலையில், ஈரானிய பீடபூமிக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான நெகிழ்வான எல்லையை நிசாப்பூர் பெரும்பாலும் வரையறுத்துள்ளது. இந்த நகரம் அதன் புகழ்பெற்ற நிறுவனர் முதலாம் சாசானிய மன்னர் முதலாம் ஷாபூர் என்பவரிடமிருந்து இந்த பெயரைப் பெற்றது, அவர் மூன்றாம் நூற்றாண்டில் இதை நிறுவியதாகக் கூறப்படுகிறது. குறைந்தது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக பச்சைநீலக் கற்களை உலகிற்கு வழங்கிய பச்சைநீலக் கற்சுரங்கங்கள் அருகில் உள்ளன. மட்பாண்டம்இஸ்லாமியப் பொற்காலத்தில் நிசாபூர், குறிப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில், மட்பாண்டங்கள் மற்றும் தொடர்புடைய கலைகளுக்கான சிறந்த மையங்களில் ஒன்றாக இருந்தது.[4] நிசாபூரில் கண்டுபிடிக்கப்பட்ட பீங்கான் கலைபொருட்கள் நியூயார்க்கில் உள்ள கலை அருங்காட்சியத்தில் மற்றும் தெஹ்ரான் மற்றும் மசுகது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படாக வைக்கப்பட்டுள்ளன. நிஷாபூரில் தயாரிக்கப்பட்ட மட்பாண்டங்கள் சாசானிட் கலை மற்றும் மத்திய ஆசியர்களுடன் தொடர்புகளைக் காட்டின. இப்போது நிசாபூரில் நான்கு மண்பாண்ட பட்டறைகள் உள்ளன.[5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia