நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 24, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு நேரத்தில் ஒளிபரப்பான காதல் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ மராத்தி தொலைகாட்சித் தொடரான 'துலா பஹ்ட் ரே' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
இந்தத் தொடரில் தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்[1] என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்[2] என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த தொடர் 25 திசம்பர் 2021 அன்று 509 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
இந்த தொடரின் கதை 20 வயாதான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது தான் கதை.
சத்யப்ரியா - சாரதா; சூர்யபிரகாஷ் மற்றும் சந்திரபிரகாஷின் தாய்
கார்த்திக் சசிதரன் - சந்திர பிரகாஷ்; சூர்யபிரகாஷின் இளைய சகோதரர்
சுபிக்ஷா - மான்சி; சந்திரபிரகாஷின் மனைவி
ரிஷ்மிதா - ரம்யா; அனுவின் தோழி
பவித்ரா - ஸ்வப்னா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
ராஜா வெற்றி பிரபு - தீனா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
ஜெய் சீனிவாஸ் குமார் - நீல்; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர் மற்றும் சுரேந்தரின் கூட்டாளி (2020)
வெற்றி வேலன் - சுரேந்தர்; சூர்யபிரகாஷின் எதிரி (2020)
பானுமதி - பிந்து; சாரதாவின் உதவியாளர்
சரத் - கோபி; ஒரு சமையல்காரர்
கற்பகவல்லி - ரஞ்சினி; ரம்யாவின் தாய்
ராஜ் மித்ரன் - ரகுபதி; ரஞ்சினியின் சகோதரர்
ரவிவர்மன் - சம்பத்; ரகுபதியின் மகன் மற்றும் ரம்யாவின் உறவினர்
நடிகர்களின் தேர்வு
இது ஒரு வித்தியாசாமான காதல் கதை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடரில் ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் முதல் முறையாக சின்னத்திரையில் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக மாதிரி நடிகையான தர்சனா அசோகன் என்பவர் அனு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமாகிறார்.