நெய்யாற்றிங்கரை
நெய்யாற்றின்கரை நகராட்சி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளதால், நெய்யாற்றின்கரை என்று அழைப்பர். மலையாளத்தில், ”ற்ற” என எழுதி, ”ட்ட” என உச்சரிப்பார்கள். எனவே, நெய்யாற்றின்கரையை நெய்யாட்டிங்கரா என்று உச்சரிப்பர். இது நெய்யாற்றின்கரை வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. திருவனந்தபுரம் பெருநகர்ப் பகுதியின் புறநகராக விளங்குகிறது. நெய்யாறு அகத்தியமலையில் இருந்து தொடங்குகிறது. இந்த நகரத்தை நெய்யாற்றின்கரை நகாராட்சியினர் ஆட்சி செய்கின்றனர். போக்குவரத்துஇங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், குருவாயூர், திருச்சூர், கோழிக்கோடு, சாலக்குளத்துக்காவு, கொல்லம், எர்ணாகுளம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு நெய்யாற்றின்கரை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, மங்களூர், புனே ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள நகரங்கள்சான்றுகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia