நெல்பேட்டை
நெல்பேட்டை (Nelpettai) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மாநகரப் பகுதியாகும்.[1] நெல்பேட்டையில் முசுலீம்கள் அதிகம் வாழுகின்றனர்.[2] அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவைப்படும் மீன், ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் நெல்பேட்டையில் அதிகம்.[3][4] அருகிலுள்ள கீழ வெளி வீதி, வடக்கு வெளி வீதி, தெற்கு வெளி வீதி, முனிச்சாலை, கீழ மாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி போன்றவை மக்கள் நெருக்கம் மிக்க முக்கியமான வீதிகளாகும். நெல்பேட்டையை ஒட்டிச் செல்லும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 133 ஆண்டுகளைக் கடந்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.[5] மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ₹175.80 கோடி மதிப்பிலான பாலம் அமைக்கும் திட்டம் நெடுஞ்சாலைத்துறையால் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தப் பாலம் 3.2 கி.மீ. நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக,[6] நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பிலிருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே, மதுரை மாநகராட்சி பசுமைப் பூங்கா வரை கட்டப்படவிருக்கிறது.[7] தசாப்தங்கள் பல கடந்து இன்னும் சுவைபட அசைவ உணவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் அம்சவல்லி பவன் அசைவ உணவகம், நெல்பேட்டையில் கீழ வெளி வீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.[8] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெல்பேட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°55'23.2"N, 78°07'31.4"E (அதாவது, 9.923100°N, 78.125400°E) ஆகும். அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், யானைக்கல், கீழ வாசல், தெற்கு வாசல் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை நெல்பேட்டைக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். போக்குவரத்துசாலைப் போக்குவரத்துமதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிக அளவில் பேருந்து சேவைகள் நெல்பேட்டை பகுதி வழியாக நடைபெறுகின்றன. நெல்பேட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது. மேலும், இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில், மதுரையின் நடுப்பகுதியில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மற்றும் சுமார் 2.5 கி.மீ. தொலைவில் மதுரை - அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலிருந்தும் நெல்பேட்டை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடருந்து போக்குவரத்துஇங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. வான்வழிப் போக்குவரத்துஅவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ளது. கல்விபள்ளிஅரசுப் பள்ளியான மதுரை மாநகராட்சி உமறுப்புலவர் பள்ளி, நெல்பேட்டையில் இயங்கி வருகிறது. வர்த்தகம்நெல்பேட்டையில், நெல் மற்றும் இதர தானியங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றன. ஆன்மீகம்பள்ளிவாசல்முசுலீம்கள் தொழுகைக்காக, நெல்பேட்டையில் சுங்கம் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அரசியல்நெல்பேட்டை பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia