மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
மதுரை[4] வானூர்தி நிலையம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய விமான நிலையம் ஆகும். இது மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டிற்குத் தனது சேவையை வழங்குகிறது.[5] இந்த வானூர்தி நிலையம் மதுரை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 km (7.5 mi) தொலைவில் நகருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 28 மார்ச் 2014, அன்று மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு 9001:2015 தரம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி என மூன்று மாநகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்கு இன்னுமும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்படவில்லை. டெர்மினல் (முனையம்)விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. பழைய முனையம் மற்றும் புதிய ஒருங்கிணைந்த முனையம். தற்போது ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் 20 நவம்பர் 2017 முதல் சரக்கு முனையமாக மாற்றப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் விமான நிலையத்தின் அதிவேக வளர்ச்சிக் காரணமாக, தனி உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களை உருவாக்குவது திட்டங்களில் உள்ளது. வரலாறுஇரண்டாம் உலகப் போரின் போது ராணுவ வானூர்தித் தளமாக மதுரை விமானநிலையம் இருந்தது[6]. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்து வரவும் விமான போக்குவரத்து துவங்கியது. ராணுவ வானூர்தித் தளமாக இருந்த மதுரை வானூர்தி நிலையம், 1960க்கு பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் வானூர்தி அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே வழியில் மும்பைக்கு வானூர்தி சென்றது. இடையில் தனியார் நிறுவனங்கள் சிறிய ரக வானூர்திகளை இயக்கித் தொடர முடியாமல் விட்டு விட்டன. மதுரையிலிருந்து கொழும்பிற்கு முதலாவது பன்னாட்டு விமான சேவையை செப்டம்பர் 20, 2012 ல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவக்கியது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையிலிருந்து துபாய்|துபாய்க்கு தனது இரண்டாவது பன்னாட்டு விமான சேவையை நவம்பர் 22, 2013 ல் துவக்கியது. பயணிகள் முனையம்129 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 12 செப்டம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது.[7] 17,560 சதுர மீட்டர் அளவு கொண்ட இரண்டடுக்கு முனையத்தில் ஒரே நேரத்தில் 500 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.[8] புதிய முனையத்தின் சில அம்சங்கள் :[9]
வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
நிகழ்வுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்•மதுரை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-30 at the வந்தவழி இயந்திரம் சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia