நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017 (Nepalese local elections, 2017) நேபாளத்தின் 7 மாநிலங்களில் உள்ள 6 மாநகராட்சிகள், 11 துணை-மாநகராட்சிகள், 276 நகர்புற நகராட்சிகள் மற்றும் 481 கிராமிய நகராட்சிகளுகளின் 763 மேயர்/தலைவர்கள், துணை மேயர்/துணைத் தலைவர்கள், 6,742 வார்டு தலைவர்கள் மற்றும் 26,790 வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களால் தேர்ந்தெடுக்க, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது.[1] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[2] [3] தேர்வு முறைநகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகள் ஒரு மேயர்/தலைவர், ஒரு துணை மேயர்/துணைத் தலைவர், வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும். நான்கு உறுப்பினர்களில் இரண்டு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதவிகளும் ஐந்தாண்டு காலம் மட்டுமே. வாக்காளர்களால் உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்/தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். பதிவான வாக்குகளில், செல்லத்தக்க வாக்குகளில் பெரும்பாலன வாக்குகள் பெற்றவரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவர். [4]
தேர்தல் முடிவுகள்
மாநிலங்கள் வாரியான முடிவுகள்7 மாநிலங்களில் நடைபெற்ற, 263 நகர்புற நகராட்சி அமைப்புகளில் உள்ள 763 மேயர்/தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் விவரம்: [5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia