நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு
நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு (Federal Socialist Forum, Nepal) (நேபாளி: संघीय समाजवादी फोरम, नेपाल; சுருக்கப் பெயர் FSFN) நேபாளத்தின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். நேபாளத்தின் தராய் பகுதிகளின் பல வட்டார கட்சிகளின் இணைப்பால் இக்கட்சி 15 சூன் 2015 அன்று நிறுவப்பட்டது.[1]உபேந்திர யாதவ் மற்றும் இராஜேந்திர சிரேஸ்தா ஆகியவர்கள் இக்கட்சியின் நிறுவனத் தலைவர்கள் ஆவார். 2017 - 2018 தேர்தல்களில்உள்ளாட்சித் தேர்தலில்இக்கட்சி 2017 நேபாள உள்ளாட்சித் தேர்தலில், 34 மேயர் பதவிகளையும், 32 துணைமேயர் பதவிகளையும், 262 வார்டு தலைவர் பதவிகளையும், 1,111 வார்டு உறுப்பினர்கள் பதவிகளையும் கைப்பற்றியது. [2] நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 20172017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு இக்கட்சி 16 இடங்களை வென்று, தேசிய அளவில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.[3] The party was one of five parties to be declared "national parties".[4]மேலும் நேபாள தேசிய சபையில் இக்கட்சி இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மாநில சட்டமன்றத் தேர்தல்களில்2017 நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. [5] நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் 29 இடங்களையும், நேபாள மாநில எண் 1ல் 3 இடங்களையும், நேபாள மாநில எண் 5ல் 5 இடங்களையும் கைப்பற்றியது. [6][7] நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் இக்கட்சி, நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. [8][9] நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது லால்பாபு ரவுத் நேபாள மாநில எண் 2ன் கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்றார்.[10][11] கொள்கைஇக்கட்சி கூட்டாச்சித் தத்துவம் மற்றும் சோசலிசம் ஆகிய கருத்துக்களைக் கொண்டுள்ளது. தேர்தல் திறன்
நேபாள மாநில எண் 2நேபாள மாநில எண் 2ல் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia