நேபாள மக்கள் இயக்கம், 1990நேபாள மக்கள் இயக்கம், 1990 ( 1990 People's Movement) (நேபாளி: जनआन्दोलन (Jana Andolan)) நேபாளத்தின் ஷா வம்ச மன்னர்களின் முடியாட்சி மற்றும் அரசியல் கட்சிகள் சார்பற்ற தேசியப் பஞ்சாயத்து ஆட்சி அமைப்பை அகற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட பல அரசியல் கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சியை நிறுவிட வலியுறுத்தி நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து இடதுசாரி முன்னனி அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம், 18 பிப்ரவரி 1990 முதல் 8 ஏப்ரல் 1990 முடிய நடைபெற்றது. [1] நேபாள மன்னருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. [2] இப்போராட்டத்தின் விளைவாக இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து, நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) எனும் புதிய அரசியல் கட்சி உதயமானது. இப்போராட்டங்களை நசுக்குவதற்காக, மன்னரின் கைப்பாவையான, அரசியல் கட்சிகள் சார்பற்ற தேசியப் பஞ்சாயத்து ஆட்சியினர், 17 பிப்ரவரி 1990 அன்று, அனைத்து அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாவட்டத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. மேலும் அனைத்து ஊடகங்களின் செய்திகளும் தணிக்கை செய்த பிறகே வெளியிடப்பட்டது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கபப்ட்டது. [3][4] பிப்ரவரி இறுதியில் பக்தபூர் நகரத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஜனநாயக அமைப்புக்கான போராட்டங்கள் நாடு முழுவதும் கலவரமாக மாறியதால், அனைத்து வணிக, கல்வி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டது. [3][4] நேபாளத்தின் தேசியத் தலநகரம் காட்மாண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள நகரங்களிலும் போராட்டம் பரவியது. ஏப்ரல் துவக்கத்தில் இராணுவம் லலித்பூரில் போராட்டக்காரர்களை சுட்டதால், கோபமடைந்த 2,00,000 போராட்டக்காரர்கள் காட்மாண்டுவை நோக்கி படையெடுத்தனர். [3][4] இறுதியாக நேபாள மன்னர் பிரேந்திரா போராட்டக்கார்களின் கோரிக்கைகளை ஏற்றார். போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 8 ஏப்ரல் 1990ல் நேபாள அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்கப்பட்டது. [3][4] 19 ஏப்ரல் 1990ல் நேபாளி காங்கிரஸ் கட்சியின் நேபாள பிரதம அமைச்சர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னரின் இறுதி முடிவுக்குட்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றபட்டு, பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia