லலித்பூர், நேபாளம்
பதான் அல்லது லலித்பூர் (Patan; சமசுகிருதம்|पाटन}}, நகரை, அலுவல் பூர்வமாக லலித்பூர் துணை பெரு நகரம் என்பர். நேபாளத்தின் காட்மாண்டு, பொக்காராவிற்குப் பின் பாதன் மூன்றாவது பெரிய நகரமாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள நேபாள தேசியத் தலைநகரான காத்மாண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தின் பாதன் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள பாதன் அரண்மன நகர சதுக்கத்தை யுனேஸ்கொ நிறுவனம், உலகப் பாரம்பரிய பண்பாடுக் களமாக அறிவித்துள்ளது.[1] கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் மையமாக பாடன் நகரம் உள்ளது. இந்நகர் திருவிழாக்களுக்கும், விருந்தோம்பலுக்கும், பண்டைய நுண் கலைகளுக்கும் பெயர் பெற்றது. உலோக மற்றும் கல் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்குகிறது. மக்கள் பரம்பல்2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாதன் நகரத்தில் 54,748 வீடுகளும், மக்கட்தொகை 226,728 கொண்டுள்ளது.[2] 25 ஏப்ரல் 2015 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாடன் நகரம் மிகவும் சேதமடைந்தது. புவியியல்காத்மாண்டு பள்ளத்தாக்கின், பாக்மதி ஆறு தென் பகுதியில் பாய்ந்து காத்மாண்டு நகரத்தை வடக்கு மேற்காக பிரிக்கிறது. பதான் நகரம் காத்மாண்டு மற்றும் பொகாரோவுக்கு அடுத்து மூன்றாவது பெருநகரமாக உள்ளது. பாதன் நகரத்தின் பரப்பளவு 15.43 சதுர கிலோ மீட்டராகும். பதான் நகராட்சி 22 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தின் எல்லைகள்:[3]
தட்ப வெப்பம்பாதன் நகரம் ஆண்டு முழுவதும் கோப்பென் காலநிலை கொண்டுள்ளது.[4] வரலாறுபதான் எனப்படும் லலித்பூர் நகரத்தை கிராத வம்சத்தினர், கி மு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவினர். பின்னர் கி பி ஆறாம் நூற்றாண்டில் லிச்சாவி வம்சத்தினர் தங்கள் நிலப்பரப்பை பதான் நகரம் வரை விரிவு படுத்தினர். மத்தியகாலத்தில், மல்ல வம்சத்தினர் காத்மாண்டு சமவெளியில் தங்கள் ஆட்சிப் பரப்பை மேலும் விரிவு படுத்தினர். கி மு 299இல் மன்னர் வீரதேவன் என்பவர் பதான் எனப்படும் லலித்பூர் நகரத்தை நிறுவினார் என கருதப்படுகிறது. ஆனால் சிலர் கிராதர்கள் தான் இந்நகரை நிறுவினர் என்பர். 1768ஆம் ஆண்டில் நடைபெற்ற கீர்த்திப்பூர் போரில், ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா லலித்பூர் எனும் பதான் நாட்டை தனது கோர்க்கா நாட்டுடன் இணைத்துக் கொண்டார். வரலாற்று நினைவுச் சின்னங்கள்![]() கி மு 250இல் பேரரசர் அசோகர் தன் மகள் சாருமதியுடன் காத்மாண்டு நகரத்திற்கு பயணித்தார். துவக்கத்தில் பாதன் நகரம், புத்தரை பெருமைப் படுத்தும் நோக்கில், தர்மச் சக்கர வடிவில் அசோகரால் கட்டப்பட்டது. முகட்டுக் கோளத்துடன் கூடிய புத்த விகாரையின் நாற்புறங்களில் நான்கு தூண்கள் நிறுவப்பட்டது. மேலும் 1,200 பௌத்த நினைவுச் சின்னங்கள் இந்நகரைச் சுற்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுனேஸ்கோவால் பட்டியலிட்ட உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக பாதன் நகரத்தின் தர்பார் சதுக்கம் அமைந்துள்ளது. 2015 நிலநடுக்கத்தில் தர்பார் சதுக்கம் கடும் சேதமடைந்தது.[5] காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள 295 பௌத்த விகாரைகளில், பாதன் நகரத்தில் மட்டும் 56% விகாரைகள் அமைந்துள்ளது. கலை நயத்துடன் கூடிய பௌத்த விகாரைகளும், இந்து சமயக் கோயில்களும் பதான் நகரை அழகுப் படுத்துகிறது. முழு பதான் நகரமும் திறந்த வெளி அருங்காட்சியகமாக திகழ்கிறது. பொருளாதாரம்பாதன் நகரத்தின் பொருளாதாரம், வேளாண்மைத் தொழில், கலைநயத்துடன் கூடிய கைவினைப் பொருட்கள் விற்பனை, குடிசைத் தொழில்கள், சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளது. புத்தா ஏர் விமான நிறுவனம் பாதன் நகரத்தில் விமான சேவை நடத்துகிறது.[6] near Patan.[7] கல்விஉயர் கல்வி நிறுவனங்கள்
ஆரம்ப & மேல் நிலைப் பள்ளிகள்
நூலகங்கள்1957இல் நிறுவப்பட்ட நேபாள தேசிய நூலகம், சிங்க தர்பாரிலிருந்து மாற்றப்பட்டு, 2001இல் பாதன் நகரத்தின் ஹரி பவனில் இயங்குகிறது.[9] பார்க்க வேண்டிய இடங்கள்![]() ![]() பாடன் நகரம் இந்துக் கோயில்களையும், பௌத்த விகாரைகளையும் அதிகமாகக் கொண்டுள்ளது:[10]
போக்குவரத்து வசதிகள்விமான நிலையம்பாதன் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காத்மாண்டு திருபுவன் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையம், உள்நாட்டுப் பகுதிகளையும், வெளிநாடுகளையும் இணைக்கிறது. சாலைப் போக்குவரத்துபதான் நகரத்தை காத்மாண்டு நகரத்துடன் இணைக்கும் ஆற்றுப் பாலங்களும், சாலைகளும் உள்ளன். மக்கள் நெருக்கம் கூடிய சாலைகளில் சிற்றுந்துகளும், ஆட்டோக்களும் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக உள்ளது. ஊடகங்கள்பதான் நகரத்தில் சாகர் மாதா எனும் எப். எம். ரேடியா நிலையம் உள்ளது. விளையாட்டுகள்
மொழிகள்பாதன் நகரத்தில் பேசப்படும் மொழிகள் நேபாள மொழி, லலித்பூர் நேவாரி, மற்றும் தமாங் மொழி ஆகும். 2015 நேபாள நிலநடுக்கம்மே 2015இல் நேபாள நாட்டில் 7.9 ரிக்டேர் அளவிற்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், பாதன் நகரத்தின் தர்பார் சதுக்கம், கிருஷ்ணன் கோயில் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் சிதைந்து போயிற்று. [11][12]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia