பஞ்சாபி கிளைமொழிகள்
பஞ்சாபி கிளைமொழிகள் பாக்கிசுத்தானில் 60% மக்களாலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலோராலும் பேசப்படுகின்றன. இந்தியாவில் பேசப்படும் முக்கியமான பஞ்சாபி கிளைமொழிகள் மாஜி, தோவாபி, மல்வாய், போவாதி என்பன. போத்தோகாரி, லாண்டி, முல்த்தானி ஆகியவை பாக்கிசுதானில் பேசப்படுபவற்றுள் முக்கியமானவை.[4] மாஜி இரு நாடுகளிலும் செந்தரமாகக் கருதப்படுகிறது. கிளைமொழிகள்மாஜிமாஜி என்பது எழுத்துப் பஞ்சாபியின் நியமமாக இருப்பதால், அதுவே பஞ்சாபியின் மதிப்புக்குரிய கிளைமொழியாக உள்ளது. இது பஞ்சாப்பின் மையப் பகுதியில் மாஜா என்னும் பகுதியில் பேசப்படுகிறது. பாக்கிசுத்தானின் மாவட்டங்களான லாகூர், சேக்குப்புரம், காசூர், ஒக்காரா, நான்கானா, சாகிப், பைசலாபாத், குச்ரன்வாலா, வாசிராபாத், சியால்கோட், நரோவால், குசராத், சேலும், பாக்பட்டன், வெகாரி, கணேவால், சாகிவால், ஹபீசாபாத், மாண்டி பகாவுத்தீன், சினியத் ஆகியவை இப்பகுதியில் அடங்குகின்றன. இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்சார், தார்ன் தாரண் சாகிப், குர்தாசுப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிற முக்கிய நகரங்களிலும், தில்லி, மும்பாய் ஆகிய நகரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் இக்கிளைமொழி பேசப்படுகின்றது. மகாசு பகாரிமகாசு பகாரி இமாச்சலப் பிரதேசத்தில் பேசப்படும் ஒரு மேற்குப் பஞ்சாபி மொழி. இதை மகாசுயி அல்லது மகாசுவி என்றும் அழைப்பதுண்டு. 2001ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,000,000. இது பொதுவாக சிம்லா, சோலான் மாவட்டங்களில் பேசப்படுகின்றது. சிம்லாவும், சோலானும், பழைய மகாசு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும். இக்கிளைமொழி, இந்தோ-ஐரோப்பியம், இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆரியம், வடக்கு வலயம், மேற்கு பகாரி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இடங்களைப் பொறுத்து இக்கிளைமொழி பல வட்டார வழக்குகளை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, கீழ் மகாசு பகாரி (பகாத்தி, பக்லியானி, கியுந்தாலி), மேல் மகாசு பகாரி (ராம்புரி, ரோஃருரி, சிம்லா சிராசி, சோடோச்சி). சாபுரிசர்கோதா கிளைமொழி எனவும் அறியப்படும் சாபுரி கிளைமொழி பெரும்பாலும் பாக்கிசுத்தானின் பஞ்சாப்பில் பேசப்படுகிறது.[5] சர்கோத் பிரிவில் பேசப்படும் இம்மொழி பஞ்சாபி மொழியின் மிகப்பழைய கிளைமொழிகளுள் ஒன்று. இதன் பெயர் முந்திய சாப்பூர் மாவட்டத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இக்கிளைமொழி, மாஜி, போத்தோகாரி, தலோச்சி ஆகிய கிளைமொழிகளின் கலவை எனலாம். குசாப் பகுதியில் வாழும் சாப்புரியர்கள் கூடிய தலோச்சிக் கிளைமொழிச் சாயலுடன் சாபுரியைப் பேசுகின்றனர். அதேவேளை தென்பகுதிச் சாபுரி மொழியில் கூடுதலான சாங்கோச்சி மொழியின் தன்மையைக் காணலாம்.[6] பரந்த பகுதியொன்றில் காணப்படும் இம்மொழி சர்கோதா, குசாப் மாவட்டங்களிலும், அயலில் உள்ள மியன்வாலி, பாக்கர் ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது. பஞ்சாபியின் பிற கிளைமொழிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக சாபுரி கிளைமொழி உள்ளது.[7] குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia