பட்டணத்தில் பூதம்
பட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[1] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்"[2] என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற இக்கற்பனைக் கதையை புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் உருவாக்கினார். மேலும் இப்படத்தில் பூதமாகத் தோன்றினார். கதைச்சுருக்கம்கூடைப்பந்து வீர்ரான பாஸ்கர் (ஜெய்சங்கர்), தொழிலதிபர் தங்கவேலின் (வி. கே. ராமசாமி) மகள் லதாவை (கே. ஆர். விஜயா) சந்திக்கிறார். இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கே. பாலாஜி. இதற்கிடையில் கலைப்பொருள் என்று நினைத்துப் பழம்பெரும் ஜாடி ஒன்றை வாங்கிவருகிறார் தங்கவேல். அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களால் அதை துரதிஷ்டம் என நினைக்கும் தங்கவேல், அந்த ஜாடியைக் கவிதைப் போட்டிக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார். அந்தப் போட்டியில் வெல்லும் பாஸ்கருக்கு ஜாடி பரிசாகக் கொடுக்கப்படுகிறது. பாஸ்கரும் அவரது நண்பர் சீசர் சீனுவும் (நாகேஷ்) வீட்டுக்கு வந்து ஜாடியில் என்ன இருக்கிறது என அறிய அதை சிரம்ப்பட்டு திறக்கிறார்கள். அதிலிருந்து அரேபிய பூதம் விடுதலையாகிறது. அந்த பூதம் பாஸ்கர், சீசர் சீனு ஆகியோருக்கு சேவை செய்கிறது, பாஸ்கரை சந்தேகப்பட்டுப் பிரியும் லாதாவை அரேபிய பூதமான ஜீ பூம் பா. சேர்த்து வைப்பதோடு; தங்கவேலுவின் தொழில் கூட்டாளியான சபாபதியும் ( வி.எஸ்.ராகவன்) அவரது மகனும் மோசமான கள்ளக் கடத்தல் கும்பலின் சூத்திரதாரிகள் என்பதைக் கண்டறிந்து அவர்களை போலீஸிடம் பிடித்துக்கொடுக்க உதவுகிறது. இறுதியில் பூதம் பூமியை விட்டுக் கிளம்புகிறது. கதாபாத்திரங்கள்
பாடல்கள்பாடல்கள்[3] கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia