தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.
வணக்கம் ஐயா. உங்களின் பயனர் பக்கத்தை இன்னமும் நீங்கள் துவக்காததால், உங்களின் பெயர் சிவப்பெழுத்துகளில் தெரிகிறது. உங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த நீங்கள் விரும்பாவிட்டால், பயனர் பக்கத்தில் பெயரை மட்டும் குறிப்பிட்டால்கூட போதுமானது. இதனை பரிந்துரையாக தங்களிடத்து வைக்கின்றேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:03, 7 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம். சர்வ தர்ம சம பவ - கட்டுரையின் உள்ளடக்கத்திற்கான எனது மொழிபெயர்ப்பை உங்கள் மணற்தொட்டியில் இறுதியில் தந்திருக்கிறேன். அதனைக் கொண்டு உங்களது மொழிபெயர்ப்பை உங்களுக்குகந்தவாறு மாற்றி சரி செய்து கொள்ளுங்கள். இறுதியில் நகர்த்துமுன் என் உரையை நீக்கி விடுங்கள். மேலும்,
மொழிபெயர்க்கப்பட/நீக்கப்பட வேண்டிய துணைத் தலைப்புகள்:
\\மொழிபெயர்க்கப்பட/நீக்கப்பட வேண்டிய துணைத் தலைப்புகள்:
References-மேற்கோள்கள்
External links-வெளியிணைப்புகள்
See also-முழுவதுமாக நீக்கிவிடலாம். (அதிலுள்ளவை அனைத்தும் த.விக்கியில் இல்லாத கட்டுரைகள்)\\
ஆகிய அறிவுறுத்தல்கள் செய்யப்படாமல் இருந்தன உங்கள் மணற்தொட்டியில். நான் மாற்றியிருக்கிறேன். அடுத்த கட்டுரையிலிருந்து நீங்களே இவற்றை அவசியம் செய்துவிடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 11:27, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
வீரசேனர்
இக்கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ளது. வீரசேனர். எனவே இதனை மீண்டும் நீங்கள் உருவாக்காதீர்கள். கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்குமுன் ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரைப் பக்கத்தின் இடப்பக்கமுள்ள பட்டையின் இறுதியில் "ஏனைய மொழிகளில்" என்பதைப் பார்த்தால் அதில் "தமிழ்" என்பது நீல நிறத்தில் இருந்தால் அக் கட்டுரை ஏற்கனவே உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:53, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
===Life====
பகுதி இக்கட்டுரையில் சேர்க்கலாமா
== வாழ்க்கை ==
வீரசேனா சோதிடம் இலக்கணம், தர்க்கம், கணிதம் ஆகியவற்றில் திறமையான ஆற்றல் பெற்றிருந்தார்.இவர் தவாலா சமண சமய சதகாண்டகம் ஆகியவற்றிற்கு தொடர் விளக்கவுரை எழுதினார். அவர் தனது சீடர்களைக் கொண்டு ஜெயதாவலா பணியினை முடித்தார்.
== Life ==
Virasena was proficient in astrology, grammar, logic, mathematics and prosody. He wrote Dhavala, a commentary on Jain canon Shatakhandagama. He also started the work on Jayadhavalaa which was competed by his disciples. He was among the jewels of Rashtrakuta king Amoghavarsha.[1]
His lineage started with Chandrasena who initiated Aryanandi.[2] Aryanandi initiated Virasena and Jayasena.[2] Virasena initiated six disciples who were Dasharayguru, Jinasena, Vinayasena, Shripal, Padmasena and Devasena.[2] Dasharayguru and Jinasena initiated Gunabhadra who later initiated Lokasena.[2] Vinayasena initiated Kumarasena who started the Kashtha Sangha.[2]இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:36, 21 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம். நீங்கள் தமிழில் உருவாக்கிய கட்டுரைகளை ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்காமல் இருந்தால் உடனேயே இணையுங்கள் (விக்கித்தரவு). பெரியசாமி தியாகராஜன் என்ற கட்டுரையை விக்கித்தரவில் இணைத்துள்ளேன். இணைக்காமல் இருந்தால் இரண்டு மூன்று தடவை பல பயனர்களால் உருவாக்கப்படலாம்.--சா. அருணாசலம் (பேச்சு) 01:22, 6 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
ஐயா. நீங்கள் என்னை பெயர் குறிப்பிட்டே கேட்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து கட்டுரைத் தலைப்பினை நகலெடுத்து தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையின் இடப்பக்கத்தில் மற்ற மொழிகளில் என்றிருக்கும் அதில் இணைப்புகளைத் தொகு என்பதில் சென்றால் பக்கத்துடன் இணைக்கவும் என்று வரும். அதில் enwiki என்பதைப் பதிந்து நகலெடுத்த தலைப்பிட்டு சேமியுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:46, 7 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
தேவைப்படும் உதவிகளை மணற்தொட்டியின் பேச்சுப் பக்கத்தில் பொதுவாகக் கேளுங்கள். இறைஞ்சிக் கேட்கவேண்டியது விக்கிப்பீடியாவில் அவசியமன்று. எங்களுக்கு மிகவும் கஷ்டமாகவும், மன உறுத்தலாகவும் உள்ளது. நேரமிருக்கையில் பயனர்கள் உதவுவார்கள். மற்றவர்களின் பேச்சுப் பக்கங்களில் ஒவ்வொரு முறையும் கேட்டால், சலிப்படைவார்கள்.
கட்டுரை விக்கி வழிகாட்டல்களின்படி அமைந்திருந்தால் நீங்களே நகர்த்தலாம். பயனர் மணல் தொட்டியில் மற்றைய பயனர்கள் தொகுப்பது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.--AntanO (பேச்சு) 04:22, 10 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
மேலேயுள்ள வழிகாட்டல்களைக் கவனித்து தொகுக்கவும். திருத்தப்பாடாத தானியங்கி மொழிபெயர்ப்பு, தமிங்கிலம், மொழி முதல் எழுத்ததாக மெய்யழுத்து அமைத்தல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும். --AntanO (பேச்சு) 19:55, 7 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது குறித்து உங்களுக்கு ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும். எனவே, உங்களின் மணல் தொட்டியில் தொடர்ந்து தொகுத்து, உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் கட்டுரையைக் கொணருங்கள். அதன் பிறகு வரைவு:கட்டுரையின் தலைப்பு என்பதாக நகர்த்துங்கள். அதன் பிறகு, குறிப்பிட்ட பயனரிடத்து உதவி கேட்கலாம். ஒருவரின் மணல் தொட்டியை இன்னொருவர் தொகுப்பது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.
நன்கு புரிதல் ஏற்பட்ட பிறகு, வரைவு:கட்டுரையின் தலைப்பு என ஆரம்பித்து எழுதலாம்.
நன்கு பழகிய பிறகு, நேரடியாக கட்டுரையின் தலைப்பினை இட்டு கட்டுரையை எழுதலாம்.
இன்னொரு பரிந்துரை: புதிய கட்டுரைகளை மட்டுமே எழுதுவதை இலக்காகக் கொள்ளாமல், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் திருத்தங்கள் / முன்னேற்றங்கள் இவற்றையும் மேற்கொண்டால், விக்கிப்பீடியா குறித்து நல்லதொரு புரிதல் ஏற்படும். பங்களிப்பது இலகுவாகி விடும் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:13, 21 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம்: இந்த உரையாடல் பக்கத்தில், ஒரு தலைப்பிற்கு மேலே பரிந்துரை எனும் தலைப்பினைக் காணுங்கள். இதே வழிகாட்டலை நீங்களும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் இருவரின் வழிகாட்டல்கள் வேறுபட்டு, குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவரின் மணல்தொட்டியை மேற்கொண்டு நாம் திருத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் ஐயா. வரைவுக் கட்டுரை திருத்தப்பட்ட பிறகு, அதனை முதன்மை வெளிக்கு நகர்த்த வேண்டும். புதிதாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். வரைவுக் கட்டுரையை நமக்காக மேம்படுத்தித் தந்தவர்களின் பங்களிப்புகள் வரலாற்றுப் பக்கத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை. எனவே அடுத்த முறை நகர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இப்போது வரைவு:ஒல்ப்காங் ஹான் என்பதனை நீக்கியிருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:35, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
அதாவது, இவ்வாறு செய்யவேண்டும்:
மணல் தொட்டியில் எழுதி முடிக்க வேண்டும்.
வரைவு:---- என நகர்த்த வேண்டும்.
மற்றவர்களிடத்து வேண்டுகோள் விடுத்து, அவர்களின் உதவியால் மேம்படுத்தலாம்.
இறுதியாக, முதன்மைவெளிக்கு (அதாவது, பொது வெளி) நகர்த்த வேண்டும்.
விக்கிப்பீடியா நன்கு பழகிய பிறகு, நேரடியாக வரைவுக் கட்டுரை எழுதலாம்.
மற்றவர்களிடத்து வேண்டுகோள் விடுத்து, அவர்களின் உதவியால் மேம்படுத்தலாம்.( உதவிக்கு --Boப்புoradleyp1 கணித கட்டுரை எனபதால் பயனரின் ஒப்புதல் ஆயிற்று என்ற பிறகு தான் பொது வெளிக்கு நகர்த்தினேன் .
இறுதியாக, முதன்மைவெளிக்கு (அதாவது, பொது வெளி) நகர்த்த வேண்டும்.
ஐயா, அந்த 'நகர்த்துதல்' என்பது உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, ராகம் எனும் தலைப்பினை இராகம் எனும் தலைப்பாக மாற்றுவதற்கு விக்கிப்பீடியாவில் வசதி இருக்கிறது. அவ்வாறு மாற்றும்போது, உள்ளடக்கம் அனைத்தும் இராகம் கட்டுரைக்கு தானாகவே வந்துவிடும். இராகம் எனும் தலைப்பை புதிதாக ஆரம்பித்து, உள்ளடக்கங்களை இடவேண்டிய அவசியமில்லை.
மேலும் ஒரு குறிப்பு. நீங்கள் உங்கள் மணல்தொட்டியில் முதலில் எழுத வேண்டிய அவசியமில்லை. நேரடியாக வரைவு பக்கத்திலேயே எழுதலாம். இதன் மூலம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். திருத்தப்பட்ட வரைவுக் கட்டுரையைப் பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். மேலும், வரைவுகளில் பகுப்புகளைச் சேர்க்க வேண்டாம். முதன்மை வெளிக்கு நகர்த்திய பிறகு தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.--Kanags\உரையாடுக08:12, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Kanags: முகைதீன் அவர்கள் ஆங்கில உள்ளடக்கத்தை முதலில் இட்டு, அதன் பிறகு வரிக்கு வரி தமிழில் மொழியாக்கம் செய்கிறார். அவரிடம் இதுவரை தொடர்புகொண்டதில், கைப்பேசி வழியாகவே தொகுப்பதையும் அறிந்துகொண்டேன். எனவேதான் மணல் தொட்டி, வரைவுக் கட்டுரை, முதன்மை வெளி எனும் வழியில் செல்லுமாறு குறிப்புகள் வழங்கினேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம். விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் எனும் பக்கத்திலுள்ள அட்டவணையில் - 13 ஆவது, 14 ஆவது வரிசையில் பாருங்கள். இந்த வழிமுறையே, மணற்தொட்டிப் பக்கத்தை வரைவுப் பக்கமாக நகர்த்துவதற்கும் பொருந்தும். செய்து பாருங்கள்.
முக்கியக் குறிப்பு: வரைவுப் பக்கத்தில் பகுப்புகளைச் சேருங்கள். வரைவுப் பக்கத்தில் சிவப்பு பகுப்புகள் இருக்கக் கூடாது. சிவப்பிணைப்புகள் அறவே கூடாது. வரைவுப் பக்கத்தை மற்றவர்கள் துப்புரவுப்படுத்துமாறு இருக்கக் கூடாது. மற்றவர்கள் மேம்படுத்தலாம். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், கட்டுரையினை உருவாக்கிய பிறகு விக்கித்தரவில் இணைக்க மறவாதீர். காண்க:துன்பேர்சியா அலாடா -- ஸ்ரீதர். ஞா(✉) 14:54, 7 பெப்பிரவரி 2024 (UTC)
வழிமாற்றுதலை இனி செய்யாதீர்கள்
இதுபோல வழிமாற்றத்தினை செய்யாதீர்கள். ஏனெனில், ஒவ்வொரு உரையாடல் பகுதியும் ஒரு அதற்குரிய பக்கத்திற்கு உரியது. வேறொரு பக்கத்திற்கு மாற்றும் போது, இரண்டு முதன்மை பக்கங்களுக்கு ஒரே ஒரு பேச்சுப் பக்கத்தினை இடுகிறீர்கள். ஒரு முதன்மை பக்கம், அதனை செம்மையாக செய்ய ஒரு பேச்சுப்பக்கம். இரண்டு முதன்மை பக்கத்திற்கு ஒரு பேச்சுப்பக்கம் அமைப்பது முறையன்று. தவறே. சீர் செய்துள்ளேன். இனி நகர்த்த வேண்டாம். த♥உழவன்(உரை) 10:00, 11 பெப்பிரவரி 2024 (UTC)
பயனர் பேச்சு
உதவி தேவைப்படும் போது, ஒரு பயனரின் பேச்சுப்பக்கத்தில் புதியதாக எழுதுங்கள். இடையிடையே எழுதினால், நீங்கள் எங்கு எழுதியுள்ளீர்கள் என தேடி எடுத்து பதில் கூறுவது கடினம். மணல் தொட்டியின் பேச்சுப்பக்கத்தில், சதுர அடைப்புக்குறிகளுக்குள் பயனர் பெயரை இட்டாலே போதும். அவருக்கு அச்செய்தி போகும். அவரது பேச்சுப்பக்கத்திற்கு சென்று கூற வேண்டியதில்லை. த♥உழவன்(உரை) 10:04, 11 பெப்பிரவரி 2024 (UTC)
அதிலுள்ள மேற்கோள் இணைப்பானது, உரிய கட்டுரைக்கு போகவில்லை. கட்டுரை உருவாக்கிய பின்பு, அதனை அழுத்திப் பாருங்கள். அது சரியாக உள்ளதா? என பார்க்க வேண்டியது உங்களது பொறுப்பு. எழுதும் மூன்று வாக்கியங்களையாவது, பிறரைப் போல, விக்கிப்பீடியாவிற்கு ஒப்ப எழுதுதல் மரபு. பிழைநீக்கம் : மேற்கோள் இணைப்பில் 56450 என்ற எண்ணை இட்டுள்ளீர்கள். படியெடுக்கும்போது அந்த எண்ணுக்கு முன்னுள்ள : என்ற குறியீட்டை எதற்கு இட்டீர்கள்? இடக்கூடாது. உங்கள் கட்டுரைகளைக் கண்டு பலர் குறுங்கட்டுரையையாவது எழுத முன்வர வேண்டும். மூத்த விக்கியர்களின் கட்டுரையில் எத்தனை வாக்கியங்கள் உள்ளன எனப் பாருங்கள். எனவே, நீங்கள் இன்னும் சற்று கவனமுடன் செய்ய விரும்புகிறேன். த♥உழவன்(உரை) 00:48, 14 பெப்பிரவரி 2024 (UTC)
எனது மணல் தொட்டியில் தலைப்பு 10 , தலைப்பு 11 சரியா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:25, 13 பெப்பிரவரி 2024 (UTC)
மணல்தொட்டிக்கு இணைப்பு தருக. த♥உழவன்(உரை) 00:49, 14 பெப்பிரவரி 2024 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம் இந்த அடிப்படை போல முதலில் அமைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ளது போல, இடைவெளி, புள்ளி, நிறுத்தற்ப்புள்ளி, முக்காற்ப்புள்ளி போன்றவற்றை பொருத்தமாக இல்லை. பலமுறை உங்களுக்கு அறிமுகம் செய்தும், சிறு சிறு அமைப்பு மாற்றங்களை நீங்கள் செய்ய மறந்து விடுகிறீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியர். நாம் முதன்முதலில் பயிற்சி செய்த கட்டுரையையும் கொண்டு, தாவரத்திற்கு ஒப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பங்களியுங்கள். உங்களுக்கு விளக்கமாக ஒரு திரைநிகழ்பதிவையும் சென்ற வாரம் அனுப்பி உள்ளேன். திரும்ப திரும்ப கவனியாமல், மறந்து, ஒரே மாதிரியான, சிறு சிறு பிழைகளை நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் இன்னும் புரிந்து கொண்டால் நல்லது. ஒவ்வொரு கட்டுரையின் வடிவமும் ஒன்றே. தரவுகளை தான் வேறுபடும். நீங்கள் அவசரத்தில் உருவாக்குவது போல தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும், 30 நிமிடங்கள் செலவு செய்தால், ஒவ்வொரு நாளும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். அப்பொழுதே நாம் பலருக்கு கற்பிக்க முடியும். ஒரே மாதிரியான திருந்தங்களை திருத்துவது எனது பணியல்ல. அறிமுகம் மட்டுமே நான் செய்ய இயலும். மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பது குறித்து வார இறுதியில் கூடி பேசுவோம். அந்த இணைய வழி உரையாடலில் கலந்து கொண்டால், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு குறிப்புகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணைப்பினை ஞாயிறு அன்று தருகிறேன். வழக்கமாக ஞாயிறு காலை ஒருமணி நேரம் பகிர்ந்து கொள்வோம். உதவிப்பேராசியர் தரும் இணைப்பினை உங்களுக்கு ஞாயிறு அன்று அனுப்பி வைக்கிறேன். த♥உழவன்(உரை) 13:48, 14 பெப்பிரவரி 2024 (UTC)
இரு மாற்றங்களைச் செய்துள்ளேன். இனி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள். விக்கித்தரவில் இணைப்பது குறித்து, திரைநிகழ்வு செய்து தருகிறேன். நீதிமன்ற பணிகள் அதிகம். எனவே, வார இறுதியில் படப்பதிவு செய்து தருகிறேன். இன்னும் சீராக செய்ய உங்களால் முடியுமென நம்புகிறேன். த♥உழவன்(உரை) 17:20, 14 பெப்பிரவரி 2024 (UTC)
தாவரவியல் சொல்லைக் கொண்டு தேடுங்கள் இங்குள்ளதை அப்பொழுதே அறிய இயலும். அவ்வாறு /* தலைப்பு 12 */ ஆமணக்குக் குடும்பம், 442, 1753 என்ற மூன்று தரவுகளை மாற்றியுள்ளேன். எங்கெங்கு என அறிந்து செயற்படுங்கள். மணல்தொட்டியில் குறைவான எழுதுங்கள். ஒரு நேரத்தில் ஒன்று. பல எழுதினால் அது உங்களது கவனிப்புத்திறனைக் குறைக்கிறது. மூன்று வரியை சிறப்பாக முதலில் எழுத இன்னும் நீங்கள் பழக வேண்டும். த♥உழவன்(உரை) 15:21, 18 பெப்பிரவரி 2024 (UTC)
ஏற்கனவே விக்கித்தரவில் கட்டுரையினை இணைப்பது குறித்து உங்களுக்கு கூறியிருந்ததை நினைவு கூறுகின்றேன்.காண்க: நிகழ்படம். ஆனால், புருக்மான்சியா என்பதனையும் நீங்கள் இணைக்கவில்லை என்பதனை நினைவில்கொள்க. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:04, 3 மார்ச்சு 2024 (UTC)
கலைக்களஞ்சியக் கட்டுரைகள்
வணக்கம். Copy and Paste செய்து உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே விட்டுவிடாமல், மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். நல்லெண்ண அடிப்படையில், உகந்த வழிகாட்டல்களை ஆரம்ப காலங்களில் மட்டுமே காட்ட இயலும்.
எண்ணிக்கைக்காக கட்டுரைகளை உருவாக்காமல், கலைக்களஞ்சியத்திற்காக கட்டுரைகளை உருவாக்குங்கள். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:20, 7 மார்ச்சு 2024 (UTC)
மதிப்பு மிகு ஐயா வணக்கம், பயனர் Info-farmer தகவலுலவன் ஐயாவை தஞ்சாவூர் கூடலில் சந்தித்தேன் அங்கு எனக்கு தாவரவியல் கட்டுரைகளை தொடக்க வடிவத்தை உருவாக்க வழிகாட்டல் செய்தார்கள்.... எனக்கும் கட்டுரைகளை மேம்படுத்த ஆவல் அதிக அளவில் ஆசை உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் தரவுகள் இல்லை ஐயா.... தங்களது வழிகாட்டல் மூலம் எனக்கு கட்டுரைகளை மேம்படுத்த உதவிட அன்போடு வேண்டுகிறேன் நன்றி ஐயா..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:02, 7 மார்ச்சு 2024 (UTC)
வணக்கம், //எனக்கும் கட்டுரைகளை மேம்படுத்த ஆவல் அதிக அளவில் ஆசை உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் தரவுகள் இல்லை// நீங்கள் ஆங்கிலக் கட்டுரையினைப் பார்க்கவே இல்லை என நினைக்கிறேன்.
மேலும் நீங்கள் இணைத்துள்ள ஆங்கிலக் கட்டுரைக்கும் தமிழ்க் கட்டுரைக்குமான உரையின் வேறுபாட்டினைக் கண்டீர்களா?
நீங்கள் எழுதுவது
.......... என்பது உருளைக் கிழங்கு குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 101 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதிலுள்ள “புருக்மான்சியா” என்ற பேரினத்தில், மொத்தம் 07 இனங்கள் உள்ளன.அதில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத் தாவரத்தின் மலரானது நீளமானது.இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1805 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இத்தாவரம்...... நாடுகளில் காணப்படுகிறது.
நான் மேலே குறிப்பிட்டுள்ள இரு கட்டுரைகளுக்கும் இரு வார்த்தைகளே வேறுபட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:47, 8 மார்ச்சு 2024 (UTC)
மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் வகைப்பாட்டியலில் உள்ளதே ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:10, 9 மார்ச்சு 2024 (UTC)
நான் உயிரியல் பாடத்தை கல்லூரியில் கற்கவில்லை. எனவே, எனக்கு அத்துறையில் புலமை இல்லை. உங்களுக்கு உள்ளடக்கத்தைத் தருபவர்களை அணுகி, உதவி பெறுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 7 மார்ச்சு 2024 (UTC)
புருக்மான்சியா சுவேலன்சு - இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரையின் அடிப்படை வடிவமைப்பில் இல்லை; அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையவில்லை. இதனை யார் மேம்படுத்துவார்கள்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:35, 7 மார்ச்சு 2024 (UTC)
இறுதி எச்சரிக்கை
கலைக்களஞ்சியத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கட்டுரைகளை தொடர்ந்து பதிப்பித்தால், உங்களின் கணக்கு தடைக்குள்ளாகும். ஏற்கனவே பதிப்பித்த கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதிய கட்டுரைகளை எழுதவும். விக்கிப்பீடியா என்பது குப்பைத் தொட்டியன்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 மார்ச்சு 2024 (UTC)
வணக்கம். தாவரவியல் கட்டுரைகளுக்கு தேவையான powo தாவரவியல் தரவு, விக்கிதரவு மேலும் பொதுவகத்தில் இருந்து பூவின் படம் மேலும் விக்கிபீடியா திட்டத்தின் அடிப்படை விதியான 3 வரிக்கு மிகாமல் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கியாக்கம் செய்யப்பட்ட இரண்டு கட்டுரைகளும் மேம்படுதப்பட்டுள்ளது..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:34, 9 மார்ச்சு 2024 (UTC)
தாவரவியல் தரவுகளை வைத்துக் கொண்டு தாவரவியல் படிக்காதவர்கள் ஒரு கட்டுரையை உருவாக்க முடியுமா? என்னால் முடியாது. உங்களால் எப்படி முடிகிறது? நேரத்தை வீணாக்காதீர்கள் தயவு கூர்ந்து நீங்கள் படித்த பாடத்திலிருந்து கட்டுரையை உருவாக்குங்கள். --கி.மூர்த்தி (பேச்சு) 12:35, 9 மார்ச்சு 2024 (UTC)
March 2024
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றிதடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கல். AntanO (பேச்சு) 17:34, 9 மார்ச்சு 2024 (UTC)
பா.தென்றல் ஆசிரியரின் கட்டுரை போன்றே திலகவதி பாஸ்கர் சாதனை பெண் கட்டுரையை எழுதி கீ.மூர்த்தி பயனரிடம் கேட்டேன். அதன் பிறகு வெளியிட்டேன். திலகவதி பாஸ்கர் நீக்கியது மட்டுமல்லாது எனது மணல் தொட்டியில் இருந்த தாவரவியல் கட்டுரைகள் 15 கட்டுரைகளை நீக்கியது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:40, 10 மார்ச்சு 2024 (UTC)
பதிப்புரிமை மீறல் செய்யக்கூடாது. AntanO (பேச்சு) 16:54, 10 மார்ச்சு 2024 (UTC)
பதிப்புரிமை மீறல் அற்ற கட்டுரைகளை மீள்விக்கலாம். --AntanO (பேச்சு) 16:55, 10 மார்ச்சு 2024 (UTC)
கவனித்தேன் ,மிக்க நன்றி!!! ஒற்றைக்கோணம் மிகச் சிறப்பாக இருத்தது ....மகிழ்ச்சி ....அடைந்தேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:52, 11 மார்ச்சு 2024 (UTC)
விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கும் அனைவருக்கும் வழிகாட்டப்படுவது யாதெனில், புதிய கட்டுரைகளை மட்டும் உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளையும் மேம்படுத்துங்கள் என்பதாகும். அத்தோடு உங்களின் கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களையும் கவனித்து, அடுத்தக் கட்டுரையில் அதனை செயல்படுத்துதலும் இன்றியமையாதது ஆகும். நல்லதொரு கலைக்களஞ்சியம் வளர்வதற்கு உதவுங்கள். உங்களின் நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் கருத்திற் கொள்ளுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 11 மார்ச்சு 2024 (UTC)
மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் தேவை..... அது சம்பந்தமான காணொளிகள் ..... தேவை. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 07:11, 11 மார்ச்சு 2024 (UTC)
அனைத்தும் பலமுறை சொல்லியிருக்கிறோம். வழிக்காட்டல் எதுவும் இல்லாமலேயே இவ்வளவு நாளாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்களா? ஏதேனும் பயிலரங்கத்தில் நேரடியாக பயிற்சி பெற்ற பிறகு இங்கு பங்களியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 11 மார்ச்சு 2024 (UTC)
இதே பேச்சுப் பக்கத்தில் பக்கத்தை நகர்த்துதல் எனும் தலைப்பின்கீழ் மீண்டும் பாருங்கள். மேற்கொண்டு உரையாடுவதற்கு எனக்குப் பொறுமையில்லை. சொல்லவேண்டியது அனைத்தும் சொல்லியாயிற்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 11 மார்ச்சு 2024 (UTC)
இந்தத் திருத்தம் உங்களுக்கு விளங்கியதா? இல்லாவிடில் கேளுங்கள். உங்கள் முடிவிலி குறியீடு என்ற புதிய கட்டுரையில் இதே போன்ற திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்பதைக் கவனித்தீர்களா?--Kanags\உரையாடுக 07:49, 11 மார்ச்சு 2024 (UTC)
தங்களின் வழிகாட்டல் மனதிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி.... மிக்க நன்றி.... இக் கட்டுரையை இன்னும் மேம்படுத்த எனக்கு ஆவல்... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:20, 11 மார்ச்சு 2024 (UTC)
உருவாக்கிய புதியக் கட்டுரைகளை மேம்படுத்துமாறு பலமுறை தெரிவித்தும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கூறுகளை கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை. விக்கிப்பீடியாவை உருவாக்கியவர்கூட இங்குள்ள கட்டுரை வடிவமைப்பு, அடிப்படைத் தேவைகள், கொள்கைகள் அடிப்படையிலேயே கட்டுரைகளை உருவாக்க இயலும். எவ்வளவு கற்றறிந்தவராக இருந்தாலும், தனிச் சலுகை எதுவும் கிடையாது. நீங்கள் புதுக் கட்டுரைகள் எதுவும் உருவாக்க இயலாதபடி, 1 வார காலத்திற்கு தடை விதித்துள்ளேன். நீங்கள் இதுவரை உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதுக் கட்டுரைகளை எழுதுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:38, 14 மார்ச்சு 2024 (UTC)
கேள்விகள் எழுப்பப்பட்டால், பதிலளிப்பது என்பது ஒரு பயனரின் கடமை; தமிழ் விக்கிப்பீடியாவில் இதனை ஒரு பண்பாடாகவும் கருதுகிறோம். இணக்கமற்ற பங்களிப்பினை செய்வதால் யாருக்கு என்ன பயன்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 1 ஏப்பிரல் 2024 (UTC)
எழுதிய கட்டுரைகளை மேம்படுத்துதல்
வணக்கம். நீங்கள் இதுவரை எழுதிய கட்டுரைகளை மேம்படுத்துமாறு பலரும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:22, 1 ஏப்பிரல் 2024 (UTC)
ஆனால், இங்கு பங்களிக்கிறீர்கள். இது முறையல்ல. ~AntanO4task (பேச்சு) 18:17, 3 ஏப்பிரல் 2024 (UTC)
@இ.வாஞ்சூர் முகைதீன் சமூக ஒப்புதல் பெற்றீர்களா எனக் கேட்டபிறகு நீங்கள் விக்கிப்பீடியாவில் இவ்வளவு பங்களிப்புகளைச் செய்துள்ளீர்கள். ஆனால் உரையாட நேரமில்லை என்று கூறுவது ஏற்கத்தகுந்தது அல்ல. நாம் உருவாக்கும் கட்டுரைகளுக்கு நாம் தான் பதில்கூற வேண்டும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:21, 5 ஏப்பிரல் 2024 (UTC)
உங்களுக்கு தேவையான அளவு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுவிட்டது. நீங்கள் மற்றவர்களின் வழிகாட்டல்களையும் ஏற்றுக் கொள்வதாயில்லை. விக்கி சமூகமாகச் செயற்பட உடன்பாடும் இல்லை. இப்போக்கு மாறாவிட்டால், உங்கள் கணக்கு தடைக்கு உள்ளாகலாம். இனி தொடர்ந்து உரையாடப்போவதில்லை. அறிவிப்புக்கள் வழங்கிவிட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி. --~AntanO4task (பேச்சு) 18:16, 3 ஏப்பிரல் 2024 (UTC)
மீத்திற காரணியாக்கல் இயல்பாக உள்ளதா? ஆங்கில மொழிநடைக்கேற்ப தமிழில் எழுத வேண்டாம். --AntanO (பேச்சு) 05:39, 6 ஏப்பிரல் 2024 (UTC)
வேண்டுகோள்
மீத்தொடர் பெருக்கம் கட்டுரையில் நான் துவக்கத்திலுள்ள கூற்றின் தவறையும் பெயரையும் சுட்டியிருந்தேன். நீங்கள் அந்த வரியில் மட்டும் மாற்றங்கள் செய்துவிட்டு கட்டுரையின் தலைப்பை மாற்றியிருக்கிறீர்கள். மற்ற பகுதியில் பெயரை மாற்றி, எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:46, 6 ஏப்பிரல் 2024 (UTC)
முழுமையாக தொகுக்க முடியாவிடின், மணல் தொட்டியினைப் பயன்படுத்தவும். வழிகாட்டல்களை தட்டிக்கழிக்க வேண்டாம்.--AntanO (பேச்சு) 18:29, 13 ஏப்பிரல் 2024 (UTC)