பரோட்டா
பரோட்டா அல்லது புரோட்டா (Parotta அல்லது Puratha) என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்.[1] இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. வகைகள்
உடன் பரிமாறுவை
சிக்கல்கள்மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம்.[சான்று தேவை] இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன.[2] புரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. படத்தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia