தயிர் வடை
தயிர் வடை (Dahi vada) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவிலிருந்து உருவான ஒரு வகை சிற்றுண்டி ஆகும். [1] இதில் வடையானது (பொரித்த பருப்பு உருண்டைகள்) கெட்டியான தயிரில் ஊறவைத்துத் தயாரிக்கப்படுகிறது.[2] பிறமொழிப் பெயர்கள்தயிர் வடை என்பது மராத்தியில் "தகி வடே" (दही वडे) என்று அழைக்கப்படுகிறது. பஞ்சாபில் இது dahi barey/dahi balley ( دہی بھلے/دہی بڑے ) என்றும் உருதுவில், தஹி வதா ( दही वड़ा ) என்றும் இந்தியில் தாஹி வாடா (ਦਹੀ ਭੱਲਾ)[3] மலையாளத்தில் தைரு வடை எனவும், தெலுங்கில் பெருகு வடை எனவும் கன்னடத்தில் மொசரு வடே என்றும், ஒடியாவில் தஹி பரா (ଦହି ବରା )[4] என்றும் வங்காள மொழியில் டோய் போரா (দইবড়়া) என்றும் அழைக்கப்படுகிறது. வரலாறு![]() இன்றைய கர்நாடகாவில் ஆட்சி செய்த மூன்றாம் சோமேசுவரனால் தொகுக்கப்பட்ட 12ஆம் நூற்றாண்டின் சமசுகிருத கலைக்களஞ்சியமான மனசோல்லாசாவில் தயிர் வடை (க்ஷிரவதம் என) செய்முறை குறிப்பிடப்பட்டுள்ளது.[5] [6] தயிர் வடை பற்றிய விளக்கங்கள் பொ. ச. மு. 500-லிருந்து இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.[7] இன்று, ஹோலி போன்ற பண்டிகைகளில் தயிர் வடை சிறப்பிடம் பிடித்துள்ளது.[6][8] தயாரிப்புஉளுத்தம் பருப்பை ஊறவைத்துக் கழுவி ஊறவைத்து, வடை மாவாக அரைத்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படுகிறது.[9] நன்கு வறுத்த வடைகள் முதலில் தண்ணீரில் இடப்பட்டு, பின்னர் கெட்டியான தயிரில் ஊறவைக்கப்படும். வடைகள் பரிமாறும் முன் சிறிது நேரம் தயிரில் ஊறவைக்கப்படும்.[9] வடைகளின் மேல் கொத்தமல்லி அல்லது புதினா இலைகள், மிளகாய்த் தூள், கருப்பு மிளகு தூள், சாட் மசாலா, சீரகம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூந்தி, மெல்லியதாக வெட்டப்பட்ட இஞ்சி அல்லது மாதுளை தூவப்படுகிறது. இந்தியாவில் சில இடங்களில், குறிப்பாக மகாராட்டிரா மற்றும் குசராத்தில் இனிப்பு தயிர் விரும்பப்படுகிறது. கொத்தமல்லி மற்றும் புளி சட்னி கலவையானது பெரும்பாலும் அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[9] கொண்டைக்கடலை மாவைப் பயன்படுத்தியும் வடைக்கான மாவினைத் தயார் செய்யலாம்.[10][11] சென்னை, பெங்களூர், தில்லி, மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கட்டாக் மற்றும் இந்தூர் உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பிரபலமான தெருக்கடைகளில் தயிர் வடை தள்ளுவண்டிகளில் தயாரிக்கப்படுகின்றது. தயிர் வடை பாக்கித்தானிலும், குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் முக்கிய நகரங்களில் காணப்படுகின்றன.[12][13][14][15] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia