வடை

வடை
உளுந்து வடை
மாற்றுப் பெயர்கள்வடா
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, இலங்கை
ஆக்கியோன்தென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்பருப்பு,உளுந்து,உருளைக்கிழங்கு, வெங்காயம்
பிற தகவல்கள்merits and demerits

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை வடை அல்லது உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை அல்லது மசால் வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் இறைவழிபாட்டில் அனுமானுக்கு சூட்டப்படும் வடை மாலையானது தட்டை வடை என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை

உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம். உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடுவர். ஏனேனில் அப்பொழுதுதான் வடை முழுவதுமாக வெந்து மெதுவாக இருக்கும்.[1]

வடை வகைகள்

வாழைப்பூ வடை

வடைப் பலகாரங்கள்

வடையைச் சாம்பார், தயிர் ஆகியவற்றில் போட்டும் ஒரு பண்டமாகக் கொடுப்பர். இவற்றை முறையே சாம்பார் வடை, தயிர் வடை என அழைப்பர். மேலும் வடை உடன் சேர்த்து பல வகை சட்னிகளும் தொட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "செய்முறை". Archived from the original on 2016-01-17. Retrieved ஆகத்து 22, 2015.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya