பர்டியூ பல்கலைக்கழகம் (Purdue University) ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் மேற்கு லாஃபயாட்டே குறுநகரில் பொதுத்துறையில் நல்கையாக அளிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஆய்வுப் பல்கலைக்கழகமாகும்.[6] இந்தப் பல்கலைக்கழகம் 1869ஆம் ஆண்டு நகரவணிகர் ழான் பர்டியூ என்பவரால் நல்கையாக வழங்கப்பட்ட பணம் மற்றும் இடத்தைக் கொண்டு துவங்கப்பட்டது; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை கல்விக்காக நிறுவப்பட்டது.[7] செப்டம்பர் 16, 1874 அன்று முதல் வகுப்புகள் தொடங்கின .[7]
இந்தப் பல்கலைக்கழகம் அமெரிக்க பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினராக உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தும் கார்னகி வரையறிதலில் "R1: முனைவர்பட்ட பல்கலைக்கழகங்கள் – மீயுயர் ஆய்வுச் செயல்திறன்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8] இந்தியானாவின் எந்தவொரு தனியார் பல்கலைக்கழக வளாகங்களை விட கூடுதலான மாணவர்கள் பர்டியூவில் படித்து வருகின்றனர்., தவிரவும் ஐக்கிய அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களில் மிகுதியானவர்கள் பயிலும் ஒன்பதாவது பல்கலையாக உள்ளது. [9] ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் தொன்மையான கணினியியல் கல்வித்திட்டம் இங்கு துவங்கியது.
↑"Visual Language Guideline". Brand.Purdue.edu. Purdue University Brand Style Guide. Archived from the original on February 14, 2020. Retrieved February 17, 2020.