பர்தோலி மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்: Bardoli Lok Sabha constituency; குசராத்தி: બારડોલી લોકસભા મતવિસ્તાર) மேற்கு இந்தியாவின் ஒரு மாநிலமான குசராத்தில் உள்ளது இந்திய நாடாளுமன்றமக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரைமுறை மறுநிர்ணயம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த இடம் பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இங்கு முதன்முதலில் 2009இல் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசின் துசார் அமர்சிங் சவுத்ரி ஆவார். சமீபத்திய 2024 தேர்தல்களின்படி, பாரதிய ஜனதா கட்சியின்பர்புபாய் வாசவா இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.