அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி (குசராத்தி: અમદાવાદ પૂર્વ લોકસભા મતવિસ્તાર) என்பது இந்தியாவின்குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியானது 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2] முதன் முறையாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த கரின் பதக் வெற்றிபெற்றார். இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவினைச் சார்ந்த பாரேசு ராவலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கசுமுக் பட்டேலும் வெற்றி பெற்றனர்.
சட்டமன்றப் பிரிவுகள்
2014ஆம் ஆண்டு நிலவரப்படி, அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
இந்த மக்களவைத் தொகுதியின் கீழுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஐந்து; காந்திநகர் தெற்கு, வாத்வா, நிகோல், தக்கர்பாபா நகர் மற்றும் பாபுநகர் ஆகியவை 2008ஆம் ஆண்டில் சட்டமன்ற சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. நரோடா மற்றும் தெக்காம் முறையே அகமதாபாது மற்றும் கபத்வஞ்ச் தொகுதிகளாக இருந்தன.[3]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
2008 வரை தேர்தல்கள், அகமதாபாது மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.
இந்த மக்களவைத் தொகுதி 2009 தேர்தல்களிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
2014 முதல் 2019 வரை, திரைப்பட நடிகர் பரேசு ராவல் இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தார்