சம்மு காசுமீர் மாநிலத்தில் நீல நிறத்தில் பலுதித்தான் (அடர் நீல நிறம்: சுகருடு மாவட்டம், காஞ்சி மாவட்டம், சிகார் மாவட்டம் மற்றும் கர்மாங் மாவட்டம்) வெளிர் நீல நிறத்தில் கார்கில்)
திபெத்திய பல்தி மொழி, உருது, காசுமீரி மற்றும் வட்டார மொழிகள்
பலுதித்தான் (Baltistan) இதனை குட்டி திபெத் என்றும் அழைப்பர். இமயமலைத் தொடரில் உள்ள காரகோரம் மலையின், கே-2 கொடுமுடியின் தெற்கில், 3,350 மீட்டர் உயரத்தில் பலுதித்தான் அமைந்துள்ளது.
சம்மு காசுமீர் இராச்சியத்தில் இருந்த பலுதித்தான் பகுதியை, 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, பாக்கித்தான் அரசு இராணுவத்தின் தூண்டிதலின் பேரில், பத்தூன் பழங்குடி மக்கள், பலுதித்தான் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
சம்மு காசுமீர் இராச்சியத்தில் லடாக் மற்றும் பலுதித்தான் பகுதிகள் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டது. பலுதித்தான் மாவட்டம் சுகருடு, கார்கில் மற்றும் லே என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. [7]
இப்பகுதியில் இசுலாம் பெரும்பான்மை சமயமாக இருப்பினும், துவக்க காலத்தில் பலுதித்தான் பகுதிகளில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் திபெத்திய பல்தி மக்கள் வாழ்ந்தனர்.
இராசதந்திர பூர்வமாக, இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகளுக்கு பலுதித்தான் முக்கிய மையமாக உள்ளது. கார்கில் போர் மற்றும் சியாச்சின் போர்களுக்கு பலுதித்தான் பகுதி முக்கியத்துவம் கொண்டது.
புவியியல்
பலுதித்தான் தலைநகரம் சுகருடு
பலுதித்தான் உயரமான மலைக் கொண்டது. இதன் வடக்கில் பல்தோரா பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது.
சிந்து ஆறு பலுதித்தான் வழியாக பாய்கிறது. இதன் முக்கிய சமவெளிகள், காப்புலு, ரொவுண்டு ஆகும்.
2017ம் ஆண்டின் கணக்குப் படி, பலுதித்தான் மலைப்பகுதிகளின் மக்கள் தொகை 9,22,745 ஆகவுள்ளது. இங்குள்ள பலதரப்பட்ட இனக்குழுக்களில், திபெத்திய பல்தி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [11].
சமயங்கள்
பலுதித்தான் பகுதிகளில் இசுலாம் அறிமுகம் ஆவதற்கு முன்னர், போன் பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தம் முக்கிய சமயமாக விளங்கியது.
கிபி ஏழாம் நூற்றாண்டுகளில் திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக பலுதித்தான் விளங்கியது. பலுதித்தானின் சுகருடு பகுதிகளில் பண்டைய பௌத்த தொல்லியல் களங்கள் அதிகமாக உள்ளது.
கிபி 16 - 17ம் நூற்றாண்டுகளில் சூபியிசம் பரவியதால், பலுதித்தானின் பெரும்பான்மையான மக்கள் நூர்பக்சியா இசுலாம் பிரிவைத் தழுவினர். [12]