பழனிச் சிரிப்பான் சிற்றினம் கொடைக்கானல் பகுதியிலிருந்து ரெவ். சாமுவேல் பேகன் பேர்பேங்க் என்பவரால் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. இது புல்னே சிரிப்பான் என்று அழைக்கப்பட்டது.[2] ஜெர்டோனியின் கருப்பு கன்னம் இல்லாதது இந்த சிற்றினத்தை முதன்முதலில் விவரிக்கப்பட்டபோது குறிப்பிடப்பட்டது. இருப்பினும் 1922-ல் ஸ்டூவர்ட் பேக்கரால் இலங்கை மற்றும் மியான்மர் உட்பட பிரித்தானிய இந்தியாவின் விலங்கினங்களின் இரண்டாவது பதிப்பில் ஜெர்டோனியின் கீழ் ஒரு துணையினமாக இது மாற்றப்பட்டது.[2][3] 1880-ல் பிளான்போர்ட் எப். டபுள்யூ. போர்திலான் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியின் அடிப்படையில் மெரிடியோனேலை விவரித்தார்.[4] 1883ஆம் ஆண்டில் வில்லியம் ரக்சுடன் டேவிசினால் மெரிடியோனேல் மற்றும் பேர்பாங்கியின் நெருங்கிய உறவு கவனிக்கப்பட்டது.[5]பாலக்காட்டு கணவாயினை உயிர் புவியியல் தடையாகக் கருதி, கன்ன நிறத்திற்கு முக்கியத்துவம் அளித்து, படிவங்களின் தற்போதைய மறுதொகுப்பு, 2005-ல் பமீலா சி. ராசுமுசென் மற்றும் ஆண்டர்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[6][7] 2017-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த சிற்றினமானது ஒரு புதிய பேரினமான மான்டிசின்க்லாவில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வேறுபாட்டின் அடிப்படையில், மெரிடியோனேல் ஒரு முழு சிற்றினமாக கருதப்படுகிறது.[8]
பழநி சிரிப்பான் இணையாகவும் சிறிய குழுக்களாகவும் காணப்படுகின்றன. இவை சில சமயங்களில் பிற இனங்களுடன் இரை தேட மந்தைகளுடன் இணைகின்றன. இவை லோபெலியா எக்செல்சா, உரோடோடெண்ட்ரான் மற்றும் இசுடுரோபிலாந்தீசு பேரினப் பூக்களின் தேனை உண்கின்றன. இவை இசுடுரோபிலாந்தீசு போன்ற சில பூக்களின் இதழ்களையும், வைபர்னம், யூரியோ, பெர்ரி மற்றும் தவிட்டுக்கொய்யா உள்ளிட்ட பலவகையான தாவரங்களின் பழங்களையும் உண்ணும்.[9]
இதனுடைய இனப்பெருக்க காலம் திசம்பர் முதல் சூன் வரை ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சமாக இருக்கும். கூடு என்பது பாசியுடன் கூடிய ஒரு கோப்பை போன்றிருக்கும். இது புல் மற்றும் அடர்த்தியான தாவரங்களில் மறைந்திருக்கும்.[10] இரண்டு நீல நிற முட்டைகள் சிவப்பு நிற அடையாளங்கள் மற்றும் கருப்பு-கன்னம் கொண்ட சிரிப்பான்களிலிருந்து பிரித்தறிய முடியாதவை. கூடு இளம் குஞ்சுகள் வளர்ந்த பின் கூடு அழிக்கப்படும். அருகில் உள்ள மற்ற பறவைகளின் கூடுகளையும் தாய்ப்பறவைகள் சேதப்படுத்தலாம். குஞ்சு பொரிக்காத முட்டைகளை தாய் பறவைகள் உண்ணலாம்.[11][12]
இதனுடைய தொடர்பு அழைப்புகள் ஏறுவரிசையில் பி-கோ... பி-கோ என அமையும் (pee-koko... pee-koko). சில் அழைப்புகள் பாடல்கள் போலத் தோன்றும்.[6]
↑ 6.06.1Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington DC & Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. p. 414.
↑Islam, MA (1987). "Food and feeding habits of the South Indian Laughing Thrushes Garrulax cachinnans and Garrulax jerdoni (Aves: Muscicapidae)". Bangladesh J. Zool.15: 197–204.
↑Ali, S; SD Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Volume 7 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 42–44.
↑Islam, MA (1989). "Nest destruction and cannibalistic behaviour of Laughing Thrushes, Garrulax spp. (Aves: Muscicapidae)". Bangladesh J. Zool.17 (1): 15–17.