பாக்கித்தானிய ரூபாய்
![]() பாக்கித்தானிய ரூபாய் (Urdu: روپیہ மொழிபெயர்ப்பு: ரூபியா}}; ஐ.எசு.ஓ: PKR) பாக்கித்தானின் அலுவல்முறையான நாணயம் ஆகும். இதனை நாட்டின் நடுவண் வங்கியாக செயல்படும் பாக்கித்தானிய அரசு வங்கி வெளியிடுகின்றது. மிகவும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சின்னம் ரூ ஆகும்; சரக்குகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது வழங்கப்படும் இரசீதுகளில் இச்சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கித்தானில் "ரூபாய்கள்", "ருபாயா" அல்லது "ருபாயே" என அறியப்படுகின்றது. பாக்கித்தானில் ரூபாயின் பெரும் மதிப்புகள் தென்னாசிய எண் முறையில் ஆயிரம், இலட்சம் (100 ஆயிரங்கள்), கோடி (10 மில்லியன்), 1 அரப் (1 பில்லியன்), 1 கரப் (1/10 டிரில்லியன்), 100 கரப் என எண்ணப்படுகின்றன. வரலாறு![]() ![]() ![]()
1947இல் பிரித்தானிய ஆட்சி கலைக்கப்பட்ட போது பாக்கித்தானிய ரூபாய் வழக்கத்திற்கு வந்தது. துவக்கத்தில் பிரித்தானிய இந்திய நாணயங்கள்/ ரூபாய்த்தாள்கள் மீது "பாக்கித்தான்" என முத்திரை பதித்து பயன்படுத்தப்பட்டன. புதிய நாணயங்களும் வங்கித்தாள்களும் 1948இல் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் போலவே பாக்கித்தானிய ரூபாயும் 16 அணாக்களாகவும், ஒவ்வொரு அணாவும் 4 பைசா அல்லது 12 பையாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சனவரி 1, 1961 முதல் பதின்மமுறைக்கு மாற்றப்பட்டது; ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்களாக இருக்கின்றது. இருப்பினும் 1994 முதல் பைசா மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படவில்லை. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia