வங்காளதேச இட்டாக்கா
வங்காளதேச இட்டாக்கா (Bengali: টাকা, குறி: ৳ அல்லது Tk, குறியீடு: BDT) வங்காளதேச மக்கள் குடியரசின் அலுவல்முறை நாணயம் ஆகும். ৳5க்கும் அதற்கு மேலும் மதிப்புள்ள வங்கித்தாள்களை வங்காளதேச வங்கி வெளியிடுகின்றது. ৳1, ৳2 வங்கித்தாள்களையும், நாணயங்களையும் வெளியிடுவது வங்காளதேச அரசின் நிதித்துறை அமைச்சரகத்தின் பொறுப்பில் உள்ளது. பெரும்பாலும் "৳" என்ற சின்னமும் கடை இரசீதுகளில் "Tk" என்ற குறியும் பயன்படுத்தப்படுகின்றது. ৳1 100 பைசாக்களாக (வங்காள உச்சரிப்பு:பொய்ஷா) பிரிக்கப்பட்டுள்ளது. வங்காள மொழியில் இட்டாக்கா என்ற சொல் பணம்,நாணயம்,தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் "இட்டாக்கா" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia