பாக்தாத் பேரழகி
பாக்தாத் பேரழகி 1973 ஆம் ஆண்டு டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ரவிசந்திரனுக்கு சோடியாக ஜெயலலிதா நடித்தார். ஜெயசுதா, சாவித்திரி, சுபா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இது 25 அக்டோபர் 1973 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[3] இந்தியில் ஷேஜாதி மும்தாஜ் என்றபெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் (1977 இல்) பிறகு வெளியிடப்பட்டது.[4] கதைகுவிஸ்தான் நாட்டுக்கு ந்தன அழகியான சுபைதா (சகுந்தலா) வந்து மன்னரின் மனதில் இடம்பெறுகிறாள். பின்னர் அவளும் அவளது சகோதரன் முராசும் தங்கள் கைப்பிடிக்குள் நாட்டைக் கொண்டு வருகின்றனர். பட்டத்து அரசி சிறையில் அடைக்கபடுகிறாள். இளவரசி காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொள்கிறாள். இளவரசன் அப்துல்லா (ரவிச்சந்திரன்) நாடற்றவனாகிறான். பாக்தாத் பேரழகி நடத்தும் போட்டியில் வெற்றிபெறும் இளவரசன் அப்துல்லா, அவளின் மனதையும் வெல்கிறான். பின்னர் அவளின் உதவியுடன் தன் நாட்டை எப்படி மீட்கிறான் என்பதே கதை. நடிகர்கள்
இசைஇப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைக்க, பாடல்வரிகளை புலமைப்பித்தன் எழுதினார்.[5]
வரவேற்புகல்கியின் காந்தன் நடிகர்களின் நடிப்பு, ரகுமானின் ஒளிப்பதிவு, ராமண்ணாவின் இயக்கம் போன்வற்றை பாராட்டினார். ஆனால் அசோகனின் நடிப்பையும், பொறுமையைச் சோதிக்கும் பல பாடல்கள் இருப்பதையும் விமர்ச்சித்தார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia