பாபர் கால்சா
அனைத்துலக பாபர் கால்சா (Babbar Khalsa International [BKI]) (Punjabi: ਬੱਬਰ ਖ਼ਾਲਸਾ, [bəbːəɾ xɑlsɑ]), என்றழைக்கப்படும் பாபர் கால்சா என்பது இந்தியாவில் இயங்கிவரும் ஒரு காலிஸ்தானி தீவிரவாத அமைப்பாகும். இந்திய அரசும் பிரித்தானிய அரசும் இதனை ஒரு தீவிரவாத இயக்கமாகக் கருத, இதன் ஆதரவாளர்கள் இதனை ஒரு எதிர்ப்பு இயக்கமாகக் கருதுகின்றன.[3][4] இவ்வமைப்பு பஞ்சாப் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. நிரங்காரி வகுப்பினருடனான மோதலில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வமைப்பு 1978-இல் துவங்கப்பட்டது.[5] 1980-களில் பஞ்சாப் கிளர்ச்சி முழுதும் முனைப்பாகச் செயல்பட்டது, ஆனால் 1990-களில் இதன் மூத்த உறுப்பினர்கள் பலர் காவல் துறையினரின் போலி மோதல் கொலைகளில் கொல்லப்பட்டதால் செல்வாக்கு இழந்தது.[5] கனடா, ஜெர்மனி, இந்தியா, ஐக்கிய இராசாங்கம் உள்ளிட்ட பல நாடுகளிலும் அனைத்துலக பாபர் கால்சா ஒரு தீவிரவாத இயக்கமாக ஆறிவிக்கப்பட்டுள்ளது.[6][7][8][9] உருவாக்கம்
பாபர் கால்சா என்ற பெயர் 1920-இல் பிரித்தானிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பாபர் அகாலி இயக்கத்தில் இருந்து பெறப்பட்டது. நவீன கால பாபர் கால்சா 1978 ஏப்ரல் 13 அன்று, நிரங்காரி வக்குப்பின் ஒரு கூட்டத்திற்கும் அதனை எதிர்த்த அகண்ட கிர்தானி ஜாதாவைச் சேர்ந்த அம்ரிததாரி சீக்கியர் குழு ஒன்றிற்கும் நடைபெற்ற இரத்தக் களரியில் துவக்கம் கண்டது. இச்சணடையில் பதிமூன்று கலகக்காரர்கள் கொல்லப்பட்டனர். நிரங்காரி தலைவர் மீது தொடுக்கப்பட்ட குற்ற வழக்கை அவர் அவ்வழக்கை ஹரியானா மாநிலத்திற்கு மாற்றிக் கொள்ள, அங்கு அடுத்த ஆண்டு வழக்கில் இருந்தும் விடுவிக்கப் பெற்றார்.[10] விளைவாக, அகாலி கட்சியினின்று வெளியில் சீக்கிய செருக்கிற்கு புது இயக்கங்களுக்கு வழி கோலப்பட்டது, மேலும் அரசும் நீதித்துறையும் சீக்கியத்தின் எதிரிகளைத் தண்டிக்காது போனால் சீக்கியர்களின் மரணத்திற்கு பழி தீர்க்கும் பொருட்டு நீதிக்குப் புரம்பான செயல்களை மேற்கொள்வதும் நியாயமானதே என்ற கோப உணர்வு தூண்டப்பட்டிருந்தது.[11] தல்விந்தர் சிங் பார்மர் தோற்றுவித்த பாபர் கால்சா, இத்தகைய எண்ணத்தைப் பரப்பிய கருவிகளுள் முதன்மையான ஒன்று. அப்பாவிகள் என்று சீக்கியர்களால் கருதப்பட்ட முன்பு குறிக்கப்பட்டுள்ள பதின்மூன்று பேரின் மரணத்திற்குப் பொறுப்பான நிரங்காரி பாபா குர்பச்சன் சிங் 1980, ஏப்ரல் 20 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை ஒப்புக்கொண்டு ரஞ்சித் சிங் என்பவர் சரணடைந்தார். பஞ்சாப்பில் இந்திய ஆட்சியை எதிர்த்துப் போராடும் பல சீக்கிய தீவிரவாத இயக்கங்களிலும் பாபர் கால்சா மிகவும் கண்டிப்பானதும், ஆபத்தானதும், ஆயுதம் நிறைந்ததும் என்று கருதப்படுவது. மற்ற தீவிரவாத இயக்கங்கள் போராட்டக் காலங்களில் சீக்கியக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பதில் சற்று இளக்கமாக இருக்கையில் பாபர் கால்சா மட்டும் தனித்து நின்று, கால்சா சகோதரத்துவ கோட்பாடுகளை மிகுந்த கண்டிப்புடன் வலியுறுத்தியது. சி. கிறிஸ்டின் ஃபேரின் கூற்றுபடி, சீக்கியக் கொள்கைகளைப் பரப்புவதில் மூலாதாரக் காலிஸ்தான் இயக்கத்தைக் காட்டிலும் பாபர் கால்சா தீவிரமாக இருந்தது[12] செயல்பாடுகள்1980-கள்நவம்பர் 19, 1981 அன்று, ஜலந்தரைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பிரீதம் சிங் பாஜ்வா மற்றும் காவலர் சூரத் சிங் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று காலை லூதியானா மாவட்டத்தில் உள்ள தாஹேரு கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அனைவரும் தப்பிக்கையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. முதல் தகவல் அறிக்கையில் (FIR) வாத்வா சிங் (தற்போது பாகிஸ்தானிலிருந்து பாபர் கல்சாவினை வழி நடத்துபவர்), தல்விந்தர் சிங் பார்மர், அமர்ஜித் சிங் நிஹங், அமர்ஜித் சிங் (தலைமை காவலர்), சேவா சிங் (தலைமை காவலர்) மற்றும் குர்நாம் சிங் (தலைமை காவலர்). இச்சம்பவத்தினால் பாபர் கல்சாவும் அதன் அப்போதைய தலைவரான தல்விந்தர் சிங் பார்மரும் பேர்பெற்றனர்.[13] ஏர் இந்தியா 182 விமான வெடிப்பு தொடர்பாக, 1985-இல் பார்மரும் இந்தர்ஜித் சிங் ரேயத்தும் கனடா அரசு குதிரையேற்றக் காவல் படையினரால் [Royal Canadian Mounted Police (RCMP)] முதன்முறையாகக் கைது செய்யப்பட்டனர். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் பார்மர் விடுவிக்கப்பட்டார். ரேயத் உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக $2000 கப்பம் விதிக்கப்பட்டு கண்கானிப்பில் வைக்கப்பட்டார். ஏர் இந்தியா 182 விமான குண்டு வெடிப்பினைப் புலனாய அமைக்கப்பட்ட விசாரனைக் குழு தல்விந்தர் சிங் பார்மர் தான் ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் தலைவரென நம்பப்படுவதாகத் தெரிவித்தது[14] வெடிகுண்டினை உருவாக்கியதாக ஒப்புக்கொண்ட இந்தர்ஜித் சிங் ரேயத் மட்டுமே தண்டிக்கப்பட்டார்.[15] 1992-இல் இந்தியாவில் பார்மர் கொல்லப்பட்டார். நியூ யார்க்கிலிருந்து பறக்கும் ஏர் இந்திய விமானங்களைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்றதற்காக மான்ட்ரியலைச் சேர்ந்த ஐந்து பாபர் கல்சா உருப்பினர்கள் மே 30, 1986 அன்று கைது செய்யப் பட்டனர். செய்தி ஆசிரியர் தாரா சிங் ஹாயரைக் குறிவைத்து அவரது அலுவலகத்திற்குச் சனவரி 1986-இல் வெடிவைக்கப் பட்டது. சில வாரங்களில் ஹாமில்டன் கோவிலைச் சேர்ந்த சீக்கியர்களும் ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்பட்ட தல்விந்தர் சிங் பார்மர் மற்றும் அஜைப் சிங் பாக்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களது தொலைபேசி உரையாடல் பதிவுகளில் நாடாளுமன்றத்தைத் தகர்க்கும் திட்டமும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளைக் கடத்தும் திட்டங்களும் இடம்பெற்றதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். மே 1986-இல், கானடாவிற்கு வருகை தந்த அமைச்சரவை மந்திரி மல்கைத் சிங் சித்து துப்பாக்கி ஏந்திய நால்வரால் சுடப்பட்டு உயிர் மீண்டார்.[16] 1990-கள்சனவரி 8, 1990-இல், காலித்தான் விடுதலைப் படையி, பாபர் கல்சாவின் துணையோடு, காவல்துறை-துணை-கண்கானிப்பாளர் கோபிந்த் ராமைக் குண்டு வைத்து கொன்றது. சீக்கியகளுக்கெதியான நிந்தனைகளுக்கும் சிறைகளில் சீக்கியப் பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாவதையும் கண்டிக்கும் விதமாக கோபிந்த் ராம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.[சான்று தேவை] செப்டம்பர் 7, 1991-இல் மொய்ஜியா கிராமத்தின் அருகில் எட்டு பாபர் கல்சா தீவிரவாதிகளுக்கும் மத்திய காவல் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. 24 மணி நேரம் தொடர்ந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[சான்று தேவை] ஆகஸ்டு 31, 1995 அன்று பஞ்சாப் முதலமைச்சர் பியந்த் சிங் பாபர் கல்சாவை சேர்ந்த திலாவர் சிங் பாபரின் தற்கொலைத் தாக்குதலால் சண்டிகர் குடிமைப்பணி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.[17] இது தொடர்பாக பாபர் கல்சாவைச் சேர்ந்த மேலும் நான்கு சீக்கியர்கள் சுட்டிக்காட்டப்பட்டனர். பியந்த் சிங் சீக்கியர்களுக்கு துரோகம் இழைத்ததற்காகக் கொல்லப்பட்டதாக பாபர் கல்சா கோரியது. 2010-கள்பஞ்சாப்பில் சூலை 2010-இல் சீக்கிய தலைவர் ஒருவரின் கொலை தொடர்பாக நான்கு சர்வதேச பாபர் கல்சா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.[18] 1983 வரை மறைவிலிருந்தே செயல்பட்டு வந்தது.[19] முன்னாள் இராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை இவ்வமைப்பு அடக்கியிருந்தது.[19] புளூஸ்டார் நடவடிக்கையின் பின்னர் கலைந்தும் பின்னர் ஒன்று திரண்டு செயல்பாட்டிலேயெ இருந்து வந்தது.[19] வீழ்ச்சி1990-களில் சீக்கிய தீவிரவாத இயக்கங்களின் மீதாக இந்திய அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டதாலும், அதைத் தொடர்ந்து காலிஸ்தான் இயக்கம் மற்றும் பிற தீவிரவாத இயக்கங்களுக்குள் அரசு ஊடுருவியதாலும் பாபர் கால்சா வெகுவாக வலுவிழந்தது. விளைவாக சுக்தேவ் சிங் பாபர் (ஆகஸ்டு 9, 1992) மற்றும் தல்விந்தர் சிங் பார்மர் (15 ஆகஸ்டு, 1992) கொல்லப்பட்டனர். பார்மரின் மரணத்தில் சர்ச்சை இருந்துவந்தது, சமீபத்தில் பார்மர் இந்தியக் காவல்துறை காவலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏற்கப்பட்டது. தெகல்கா விசாரணையில் இந்திய பாதுகாப்பு படை விசாரித்தபின் பார்மரை கொன்றதோடு ஒப்புதல் வாக்குமூலங்களையும் அழிக்கும்படி உத்தரவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.[20] கனடாவின் சிபிசி பிணையமும் பார்மர் இறப்பதற்கு முன் சில நேரம் காவலில் இருந்ததாக அறிவித்தது.[21] தொண்ணூறுகளில் பின்னடைவுகளைச் சந்தித்தபோதும், பாபர் கால்சா, இன்றளவும் தலைமறைவாகச் செயல்பட்டு வருகிறது. எனினும் முன்பிருந்த முனைப்பின்றியே செயல்படுகிறது. இயக்கத்தின் தற்போதைய தலைமை வாதவா சிங் பாபரிடம் உள்ளது. 2007 அக்டோபரில் லூதியானாவில் 7 பேர் மரணத்திற்கும் 32 பேர் காயத்திற்கும் காரணமான சிங்கார் திரையரங்க வளாகக் குண்டுவெடிப்பிற்கு பாபர் கால்சா காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையால் சந்தேகிக்கப்படுகிறது.[22] இவற்றையும் காண்க
சான்றாதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia