பாலுறுப்பு![]() பாலுறுப்பு அல்லது இனப்பெருக்க உறுப்பு (sex organ or reproductive organ) பாலியல் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் உயிரிகளின் உடல் உறுப்பு ஆகும். இனப்பெருக்கத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்புகளும் இனப்பெருக்கத் தொகுதியின் அங்கங்களாகும். ஆண்களின் விந்தகம், பெண்களின் சூலகம் முதன்மை பாலுறுப்புகளாக அழைக்கப்படுகின்றன.[1] வெளிப்புறத்திலுள்ள பால் உறுப்புக்களான, இருபாலருக்கும் பிறப்பின்போது காணக்கூடிய, பிறப்புறுப்புகளும் உட்புறத்திலுள்ள பிற பாலுறுப்புகளும் இரண்டாம்நிலை பாலுறுப்புகளாக வரையறுக்கப்படுகின்றன.[1] பாசிகள், பன்னங்கள், மற்றும் இவற்றையொத்த புணரித்தாவரங்களில் இனப்பெருக்கத்திற்கு பால்செல்களைக் (gametangia) கொண்டுள்ளன.[2] மலர் பூக்கும் தாவரங்களில் மகரந்தமும் சூல் முட்டைகளும் இனப்பெருக்கத்திற்கு துணை புரிகின்றன; ஆனால் புணரித்தாவரங்களில் பாலுறுப்புகள் மகரந்தத்திற்குள்ளும் சூல் வித்துகளுக்குள்ளும் உள்ளன.[3] ஊசியிலை தாவரங்களிலும் இனப்பெருக்க உறுப்புகள் அவற்றின் புணிரியில் உள்ளடங்கியுள்ளன; ஊசியிலைக் கூம்புகளிலும் மகரந்தத்திலும் இவை அடங்கியுள்ளன, ஆனால் கூம்பும் மகரந்தமும் பாலுறுப்புகளாக கருதப்படுவதில்லை. மனிதர்கள்![]() மனிதர்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான பாலுறுப்புகள் உள்ளன. பாலுறுப்பின் சில பகுதிகள் உடலுக்கு வெளியேயும் சில உடலுக்குள்ளும் உள்ளன. ஆண்களில் வெளிப்புறம் தெரிகின்ற பாலுறுப்பு ஆண்குறியும் விந்தகங்களை உள்ளடக்கிய விரைப்பையும் ஆகும். உடலினுள்ளே விந்தகம் விந்துவையும் ஆண்மைத்தனத்தை தருகின்ற ஆண்மையியக்குநீரையும் தயாரிக்கிறது. பிற சுரப்பிகள் விந்துப் பாய்மம் என்கின்ற பாய்மத்தை தயாரிக்கின்றன. பெண்களில் வெளியே தெரிகின்ற பாலுறுப்பு பெண்குறி எனப்படும். பாலுறவின் போது ஆண்குறியை ஏற்கின்ற யோனி; கருத்தரித்தபின் குழவி வளரும் கருப்பை, முட்டைகளையும் பெண்மைத்தனத்தை தருகின்ற ஈத்திரோசனையும் தயாரிக்கின்ற சூலகங்கள், கருப்பையை சூலகங்களுடன் இணைக்கும் பாலோப்பியன் குழாய்கள் ஆகியன பெண்ணின் உடலினுள்ளே உள்ள பாலுறுப்புகளாகும். பல உலக சமூகங்களும் பாலுறுப்புகளை குறித்த எதிரான எண்ணங்களை உடையவையாக உள்ளன; இதனால் பாலுறுப்புகளை பொதுவிடங்களில் மறைக்காமலிருப்பது வெட்கக்கேடாக பார்க்கப்படுகின்றது. வளர்ச்சிபிறப்பிற்கு முந்தைய உருவாக்கத்தின்போது பாலுறுப்புகள் கருவளர்ச்சியின் துவக்கத்தில் பொதுவான முன்மூலத்திலிருந்து உருவாகின்றன; பின்னர் இவை பாலின வேறுபாடு அடைந்து ஆண் அல்லது பெண் பாலுறுப்புகளாக உருவெடுக்கின்றன. வை நிறப்புரியில் உள்ள எஸ்ஆர்வை மரபணுவும் விதையில் வரையறுத்துள்ள காரணியும் இந்த வேறுபாட்டை தீர்மானிக்கின்றன. இவை இல்லாதவிடத்து பாலுறுப்புகள் சூலகங்களில் தொடர்ந்து வளர்கின்றன. ![]() பின்னதாக, உருபெற்ற கருவின் சூலகங்களும் விந்தகங்களும் தயாரிக்கும் இயக்குநீர்கள் தொடர்ந்து உள்ளக, வெளிப்புற பாலுறுப்புகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. கருவுருவின் துவக்க கால பாலுறுப்புகள் இருபாலருக்கும் அடிப்படையில் பெண்ணின் பாலுறுப்புக்களை போலவே இருக்கும்: நடுவில் சிறு புடைப்புடன் கூடிய இரண்டு "சிறுநீர்சனனிக்குரிய மடிப்புகளும்" அந்த புடைப்பிற்குப் பின்னால் சிறுநீர்வழியும் காணப்படும். கருவுருவிற்கு விந்தகம் இருந்து அவை ஆண்மையியக்குநீரைச் சுரந்தால், இதற்கு பாலுறுப்பு கலங்கள் வினைபுரிந்தால் வெளிப்புற சிறுநீர்சனனிக்குரிய மடிப்புகள் பெரிதாகி நடுப்புடைப்புடன் இணைந்து விரைப்பை உருவாகும்; புடைப்பு இன்னமும் பெரிதாகவும் நீளமாகவும் வளர்ந்து ஆண்குறியாகிறது. உட்புற சிறுநீர்சனனி வீக்கங்கள் வளர்ந்து ஆண்குறியைச் சுற்றி ஆண்குறி சிறுநீர்வழி உருவாகிறது. ஒரு பாலினத்தின் ஒவ்வொரு பாலுறுப்பிற்கும் அமைப்பொத்த எதிர் உறுப்பு மற்ற பாலினத்தில் உண்டு. பாலின வேறுபடும் முறையில் இரண்டாம் நிலை பாலின பண்பு மாற்றங்களும் அடங்கும்; மறைவிட முடி, முகத்தில் மீசை மற்றும் தாடி, பெண்களின் முலைகள் ஆகியன பருவநிலை காலத்தில் உண்டாகின்றன. மேலும் மூளையின் கட்டமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன; இவை, முழுமையாக இல்லாவிடினும், நடத்தையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இருபால் உடல் என்பது ஆண்,பெண் குறிகளின் வளர்ச்சியில் இடைப்பட்ட நிலையாகும். குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்களுக்கு பாலின குறிகளை மாற்றுவதா வேண்டாமா என்ற கடினமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவரை முடிவெடுக்க விட்டு விடுகிறார்கள். அவர்கள் மாற்ற முனைந்தால் குழந்தையின் பாலின அடையாளத்திற்கேற்ற பாலுறுப்பைத் தேர்ந்தெடுப்பதில் 50% வாய்ப்பே உள்ளது. எனவே தவறாக முடிவெடுத்தால் வளர்ந்தபிறகு திருநங்கை/திருநம்பியாக வாய்ப்பு உண்டு. இது அவர்களது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.[4] இருபால் உடல் என்பது ஆண், பெண் குறிகளின் வளர்ச்சியில் இடைப்பட்ட நிலையாகும். குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்களுக்கு பாலின குறிகளை மாற்றுவதா வேண்டாமா என்ற கடினமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவரை முடிவெடுக்க விட்டு விடுகிறார்கள். அவர்கள் மாற்ற முனைந்தால் குழந்தையின் பாலின அடையாளத்திற்கேற்ற பாலுறுப்பைத் தேர்ந்தெடுப்பதில் 50% வாய்ப்பே உள்ளது. எனவே தவறாக முடிவெடுத்தால் வளர்ந்தபிறகு திருநங்கை/திருநம்பியாக வாய்ப்பு உண்டு. இது அவர்களது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.[4] வலிமையான பாலினத் தேர்வு பாலுறுப்புகளின் கட்டமைப்பையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதால் மற்ற உறுப்புக்களை விட இவை விரைவாக வளர்கின்றன.[5] மேற்கோள்கள்
மேலும் அறிய
|
Portal di Ensiklopedia Dunia