ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் 2014 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார்[1]. இத்திரைப்படத்தில் அருள்நிதி, பிந்து மாதவி, ஆதிசா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்[2][3] . கதை சுருக்கம்நிமிடத்திற்கு நிமிடம் மனிதனின் விதி மாறும் என்ற கருத்தை வலியுறுத்தி வெளி வந்திருக்கும் படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும். நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு ஓடச்சொல்கிறார். அப்படி சென்றால் அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறுகிறார். ஒரு புறம் அருள்நிதியின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தனது காதலியையும் கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதற்கு அருள்நிதி ஒப்புக்கொள்கிறார். அருள்நிதியுடன் அவரின் நண்பர்களான பிந்து மாதவியும், பகவதி பெருமாளும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கும் பணத்தேவை இருப்பதால் அருள்நிதியுடன் சேர்ந்து இந்தக் கடத்தலை நடத்த முடிவெடுக்கின்றனர். அதன்படி, அர்ஷிதாவின் கல்யாணம் நடக்கும் சர்ச்சுக்கு சென்று துப்பாக்கி முனையில் அவளைக் கடத்த திட்டம் தீட்டுகின்றனர். அதற்கான துப்பாக்கியை அருள்நிதியின் மற்றொரு நண்பரான கார்த்திக் சபேஸ் ஏற்பாடு செய்துகொடுக்கிறார். இரண்டு துப்பாக்கி தேவைப்படும் நிலையில் ஒரு துப்பாக்கியை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறார். மற்றொன்றை வாங்கக் கிளம்பும் வேளையில் மின்விசிறி தலையில் விழுந்து மயக்கமடைகிறார் சபேஸ். அதனால் கடத்தலுக்கு அவரைக் கூட்டிச் செல்லாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர். சரியாக 9.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து இறுதியில் அர்ஷிதாவை கடத்தினார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதையை மூன்று விதமாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். அதாவது, 9.00 மணிக்கு அவர்கள் வீட்டை கிளம்பியதால் என்ன நடந்தது, அதேபோல் 1 நிமிடம் முன்னதாக 8.59 மணிக்கு கிளம்பினால் என்ன நடந்தது, 1 நிமிடம் தாமதமாக 9.01 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது என மூன்று விதங்களில் படமாக்கியிருக்கிறார். நடிகர்கள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "ஐடியா சுவாரஸ்யமாக இருந்தாலும் 'அய்யய்யோ மூணாவது தடவையா..!?’ என இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீட்டி முழக்கியதில்... ஆவ்வ். இந்தக் கதைக்கு சிவன், பிரம்மா, விதி என ஆன்மிக லெக்சர் அவசியமா? ஆனாலும், களவாணிகளின் 'ரிலே ரேஸ்’ ஓட்டம்... ஜாலிக் கொண்டாட்டம்!" என்று எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[4] ஆதாரம்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia