பிம்பிரி
பிம்ப்ரி என்னும் புறநகர்ப் பகுதி மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகில் உள்ளது. இது புனே நகரில் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. புனே மாவட்டத்தின் ஹவேலி தாலுகாவில் உள்ள இந்த புறநகர்ப் பகுதி, பிம்பிரி, சிஞ்ச்வடு என்ற இரட்டை நகரங்களைக் கொண்டது. இந்த நகரங்களை பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியினர் ஆளுகின்றனர். பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக, பிம்பிரியில் இருந்து புனே நகருக்கு செல்லலாம். பண்பாடுகுருநானக் ஜெயந்தி, தசரா, பகரானா சாகிப், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாடுகின்றனர். தொழிற்சாலைகள்இங்கு டாட்டா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. போக்குவரத்துபிம்பிரியில் போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த நகரத்திற்கு அருகிலேயே புனே விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள பிம்பிரி ரயில் நிலையத்திற்கு புனே புறநகர் ரயில்கள் வந்து செல்கின்றன. பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லலாம். இங்கே புனே மாநகரப் பேருந்துகளும் இயங்குகின்றன. இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia