பிரந்தாஸ் ஆறு
பிரந்தாஸ் ஆறு (ஆங்கிலம்: Brantas River; இந்தோனேசியம்: Sungai Brantas) என்பது இந்தோனேசியா கிழக்கு ஜாவாவின் (East Java) மிக நீளமான ஆறு ஆகும்.[2] 320 கி.மீ நீளம் கொண்ட இந்த ஆறு, 11,000 கி.மீ2-க்கும் கூடுதலான பரப்பளவில் வடிநிலத்தைக் கொண்டுள்ளது.[3] காவி மலை (Mount Kawi), வில்லிஸ் மலைகளின் (Mount Wilis) தெற்குச் சரிவு; மற்றும் லிமான்-லிமாஸ் மலை, அருஜுனோ வெளிராங் மலை (Mount Welirang), அஞ்சாஸ்மோரோ மலை (Mount Anjasmoro), ஆகிய மலைகளின் வடக்குச் சரிவுகளில் இருந்து இந்த ஆறு உற்பத்தி ஆகிறது.[4] பொதுஇந்த ஆற்றின் பாதை, அரை வட்டம் அல்லது சுழல் வடிவத்தில் உள்ளது. அதன் மூலத்தில், இந்த ஆறு தென்கிழக்கு நோக்கிச் செல்கிறது. பின்னர் படிப்படியாகத் தெற்கு, தென்மேற்கு, மேற்குத் திசைகளில் வழிந்து, அதன் பின்னர் வடக்கு நோக்கி வளைந்து, இறுதியாக கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இந்தக் கட்டத்தில், இந்த ஆறு பிரிந்து கலிமாஸ் ஆறு (Kalimas) மற்றும் போரோங் ஆறு (Porong River) என இரு ஆறுகளாக மாறுகிறது. வரலாறுகி.பி 950-ஆம் ஆண்டு வாக்கில், முப்பு சிந்தோக் எனும் மன்னர் (Mpu Sindok), மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தை, பிரந்தாஸ் ஆற்றங்கரையில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு மாற்றினார். மெராபி எரிமலை வெடிப்பு காரணமாக, முப்பு சிந்தோக் தன் இராச்சியத்தை தற்போதைய நகரமான மடியூனுக்கு (Madiun) அருகிலுள்ள இந்தப் புதிய இடத்திற்கு மாற்றி இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. புவியியல்![]() ![]() பிரந்தாஸ் ஆற்றுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 26°C ஆகும்.[5] வெப்பமான மாதம் அக்டோபர் மாதம்; சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 30 °C; மிகக் குளிரான மாதம் சூன் மாதம்; சராசரி வெப்பநிலை 24 °C.
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia