இந்தோனேசிய நிலப் பகுதிகள் இந்தோனேசியாவின் தேசிய சின்னம்
இந்தோனேசிய நிலப் பகுதிகள் அல்லது இந்தோனேசிய ஆட்சிப் பகுதிகள் (ஆங்கிலம் : Regions of Indonesia இந்தோனேசியம் : Wilayah di Indonesia ) என்பது இந்தோனேசியாவின் நிலப் பகுதிகள் அல்லது நிலப் பிராந்தியங்கள் அல்லது நில வட்டாரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதாகும்.
இந்தோனேசியாவின் நிர்வாக மண்டலங்கள் பல பகுதிகளாக மத்திய அரசாங்கத்தால் பிரிக்கப்பட்டு; சட்டம் அல்லது ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்
இந்தோனேசியாவின் நிலப் பகுதிகள், ஏழு புவியியல் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
புவியியல் அலகுகள்
இந்தோனேசியாவின் பகுதிகள் ISO 3166-2:ID ID-SM
ID-JW
ID-KA
ID-NU
ID-SL
ID-ML
ID-PP
ISO 3166-2:ID -இன் படி, இந்தோனேசியா ஏழு புவியியல் அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வோர் அலகும் பெரிய தீவுகள் அல்லது ஒரு தீவுக் குழுவைக் கொண்டுள்ளது. அந்தப் புவியியல் அலகுகள் பின்வருமாறு:
பிரிவுகள்
குறியீடு
புவியியல் அலகு
பெரும் மாநிலங்கள்
மக்கள் தொகை (2023)[ 1]
பெரிய நகரம்
உயர்ந்த நிலம்
ID-SM
சுமாத்திரா
அச்சே , பாங்கா பெலித்தோங் தீவுகள் , பெங்கூலு , ஜாம்பி பிரிவு , லாம்புங் , வடக்கு சுமாத்திரா , ரியாவு , இரியாவு தீவுகள் , தெற்கு சுமாத்திரா மாகாணம் , மேற்கு சுமாத்திரா
60,756,400
மேடான்
கெரிஞ்சி மலை 3,805 மீ (12484 அடி)
ID-JW
சாவகம் (தீவு)
பண்டென் மாகாணம் , நடுச் சாவகம் , கிழக்கு சாவகம் , ஜகார்த்தா , யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி , மேற்கு சாவகம்
155,645,500
ஜகார்த்தா
செமேறு மலை 3,678 மீ (12067 அடி)
ID-KA
கலிமந்தான்
மத்திய கலிமந்தான் , கிழக்கு கலிமந்தான் , வடக்கு கலிமந்தான் , தெற்கு கலிமந்தான் , மேற்கு கலிமந்தான்
17,259,000
சமாரிண்டா
புக்கிட் ராயா மலை 2,278 மீ (7,474 அடி)
ID-NU
சிறு சுண்டா தீவுகள்
பாலி , மேற்கு நுசா தெங்காரா , கிழக்கு நுசா தெங்காரா
15,533,700
தென்பசார்
ரிஞ்சனி மலை 3,726 மீ (12,224 அடி)
ID-SL
சுலாவெசி
மத்திய சுலாவெசி , கோருந்தாலோ , வடக்கு சுலாவெசி , தெற்கு சுலாவெசி , தென்கிழக்கு சுலாவெசி , மேற்கு சுலாவெசி
20,573,900
மக்காசார்
இலத்திமோஜோங் மலை 3,478 மீ (11,411 அடி)
ID-ML
மலுக்கு தீவுகள்
மலுக்கு மாகாணம் வடக்கு மலுக்கு மாகாணம்
3,401,600
அம்போன்
பினாயா மலை 3,027 மீ (9,931 அடி)
ID-PP
மேற்கு நியூ கினி
மத்திய பாப்புவா , பாப்புவா உயர்நிலம் , பாப்புவா பிரிவு , தெற்கு பாபுவா , தென்மேற்கு பாப்புவா , மேற்கு பாப்புவா (மாகாணம்)
5,670,000
ஜெயபுரா
புன்சாக் ஜெயா 4,884 மீ (16,024 அடி)
கிழக்கு இந்தோனேசியா; மேற்கு இந்தோனேசியா
மேற்கு கிழக்கு இந்தோனேசியா
டச்சு ஆட்சி
டச்சு காலனித்துவ ஆட்சியின் கடைசிக் கட்டங்களில், ஜாவா மற்றும் கலிமந்தானுக்கு கிழக்கே உள்ள பகுதி பெரும் கிழக்கு என்றும் பின்னர் கிழக்கு இந்தோனேசியா என்றும் அறியப்பட்டது. 24 டிசம்பர் 1946 இல், அதே பகுதியை உள்ளடக்கிய கிழக்கு இந்தோனேசியா மாநிலம் மேற்கு நியூ கினி தவிர) உருவாக்கப்பட்டது.
இது இந்தோனேசியாவின் ஐக்கிய மாநிலங்களின் ஓர் அங்கமாக இருந்தது, மேலும் 17 ஆகத்து 1950-இல் இந்தோனேசியாவின் ஒற்றையாட்சிக் குடியரசில் கலைக்கப்பட்டது.
கிழக்கு இந்தோனேசியாவின் 17 பிரிவுகள்
தற்போது, கிழக்கு இந்தோனேசியா 17 பிரிவுகளைக் கொண்டுள்ளது: பாலி , கிழக்கு நூசா தெங்காரா , மேற்கு நூசா தெங்காரா , மத்திய சுலாவெசி , கோரோந்தாலோ , வடக்கு சுலாவெசி , தெற்கு சுலாவெசி , தென்கிழக்கு சுலாவெசி , மேற்கு சுலாவெசி , மலுக்கு மாகாணம் , வடக்கு மலுக்கு மாகாணம் , மத்திய பாப்புவா , உயர்நில பாப்புவா , பாப்புவா பிரிவு , தெற்கு பாப்புவா , தென்மேற்கு பாப்புவா , மேற்கு பாப்புவா (மாகாணம்) .[ 3] [ 4] [ 5]
மற்ற 21 பிரிவுகளை உள்ளடக்கிய பிராந்தியம் சுமாத்திரா , சாவகம் (தீவு) , கலிமந்தான் என அறியப்படும் மேற்கு இந்தோனேசியா .[ 6]
வளர்ச்சிப் பகுதிகள்
தேசிய வளர்ச்சித் திட்டமிடல் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தோனேசியா நான்கு முக்கிய வளர்ச்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் மேடான் , ஜகார்த்தா , சுராபாயா , மக்காசார் ஆகிய முக்கிய நகரங்களால் வழிநடத்தப்படுகின்றன, .[ 7] [ 8] [ 9]
இந்தோனேசியாவின் நான்கு முக்கிய வளர்ச்சிப் பகுதிகள்
முக்கிய வளர்ச்சிப் பகுதி
மத்திய நகரம்
வளர்ச்சி மண்டலம்
பெரும் மாநிலங்கள்
முக்கிய வளர்ச்சிப் பகுதி A(முக்கிய வளர்ச்சி பகுதி A )
மேடான்
வளர்ச்சிப் பகுதி I
அச்சே வடக்கு சுமாத்திரா
வளர்ச்சிப் பகுதி II
ரியாவு , இரியாவு தீவுகள் , மேற்கு சுமாத்திரா
முக்கிய வளர்ச்சிப் பகுதி B(முக்கிய வளர்ச்சி பகுதி B )
ஜகார்த்தா
வளர்ச்சிப் பகுதி III
பாங்கா பெலித்தோங் தீவுகள் , பெங்கூலு , ஜாம்பி பிரிவு , தெற்கு சுமாத்திரா மாகாணம்
வளர்ச்சிப் பகுதி IV
லாம்புங் , பண்டென் மாகாணம் , நடுச் சாவகம் , ஜகார்த்தா , யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி , மேற்கு சாவகம்
வளர்ச்சிப் பகுதி V
மேற்கு கலிமந்தான்
முக்கிய வளர்ச்சிப் பகுதி C(முக்கிய வளர்ச்சி பகுதி C )
சுராபாயா
வளர்ச்சிப் பகுதி VI
கிழக்கு சாவகம் பாலி
வளர்ச்சிப் பகுதி VII
மத்திய கலிமந்தான் , கிழக்கு கலிமந்தான் , வடக்கு கலிமந்தான் , தெற்கு கலிமந்தான்
முக்கிய வளர்ச்சிப் பகுதி D(முக்கிய வளர்ச்சி பகுதி D )
மக்காசார்
வளர்ச்சிப் பகுதி VIII
கிழக்கு நூசா தெங்காரா , மேற்கு நூசா தெங்காரா , தெற்கு சுலாவெசி , தென்கிழக்கு சுலாவெசி , மேற்கு சுலாவெசி
வளர்ச்சிப் பகுதி IX
மத்திய சுலாவெசி , கோரோந்தாலோ , வடக்கு சுலாவெசி
வளர்ச்சிப் பகுதி X
மலுக்கு மாகாணம் , வடக்கு மலுக்கு மாகாணம் , மத்திய பாப்புவா , பாப்புவா உயர்நிலம் , பாப்புவா பிரிவு , தெற்கு பாபுவா, , தென்மேற்கு பாப்புவா , மேற்கு பாப்புவா (மாகாணம்)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
நிர்வாகம்
மத்திய அரசு
அரசு அமைச்சு
அரசியல், பாதுகாப்புத் துறை ஒருங்கிணைப்பு
சட்டம், மனித உரிமைகள், குடிவரவு ஒருங்கிணைப்பு
பொருளாதார ஒருங்கிணைப்பு
உள்கட்டமைப்பு, வட்டார வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு
மனித முன்னேற்றம், பண்பாட்டு ஒருங்கிணைப்பு
சமூக அதிகாரமளிப்பு, ஒருங்கிணைப்பு
உணவுத் துறை ஒருங்கிணைப்பு
நில உடைமை, இடம் சார்ந்த திட்டமிடல்
வேளாண்மை
பண்பாடு
தொடர்பு இலக்கவியல்
கூட்டுறவு
படைப்புப் பொருளாதாரம்
பாதுகாப்பு
எரிசக்தி கனிம வளங்கள்
சுற்றுச்சூழல்
நிதி
வெளியுறவு
வனவியல்
உயர் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம்
மனித உரிமைகள்
சுகாதாரம்
உள்துறை
வீடமைப்பு குடியிருப்புப் பகுதி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு
தொழில்துறை
முதலீடு கீழ்நிலை கொள்கை
சட்டம்
மனிதவளம்
கடல், மீன்வளத்துறை
சிறிய நடுத்தர வணிகம்
தேசிய வளர்ச்சித் திட்டமிடல்
பொதுப்பணி
மக்கள் தொகை குடும்ப வளர்ச்சி
தொடக்க இடைநிலைக் கல்வி
மதத் துறை
சமூகத்துறை
மாநிலச் செயலகம்
இயங்குபொறி பயன்பாடு, சீர்திருத்தம்
அரசு நிறுவனங்கள்
சுற்றுலா
வணிகம்
இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சுபோக்குவரத்து
இடம் பெயர்தல்
பின்தங்கிய கிராமங்கள் மேம்பாடு
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு
இளைஞர் விளையாட்டு
அரசு நிறுவனம்
மாநில அரசு
நிர்வாகம்
நீதி வேறு அரசு நிறுவனம்