பிரித்தானிய இந்தியக் கரைகடந்த ஆள்புலம்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் (ஆங்கிலம்:British Indian Ocean Territory) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான தியேகோ கார்சியாவில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது.[1][2][3] புலப்பெயர்வு முகாம்இங்கு தியகோ கார்சியாத் தீவிலுள்ள தண்டர் கௌ அகதி முகாமில் பல நூற்றுக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தண்டர் கௌ அகதி முகாம் 12 சதுர மைல் பரப்பளவுள்ளது. அகதி முகாமுக்கு வெளியே ஒரு திருமனையும் ஒரு தேவாலயமும் ஒரு கோவிலும் இருக்கின்றன. இங்குள்ள பிள்ளைகளுக்கு இலங்கைத் தமிழ்ப் பாடத்திட்டத்திற் கல்வி கற்பிக்கப்படுகிறது. அப்பாடசாலை முகாமுக்கு வெளியே திருமனையில் இயங்குகிறது. தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் உளவியலாளர்களும் மருத்துவர்களும் ஒரு நீதிமன்றமும் கூட இங்கிருக்கின்றன. |
Portal di Ensiklopedia Dunia