பிலமோன் (நூல்)![]()
இத்திருமுகம் பவுல் எழுதிய பதின்மூன்று மடல்களிலும் மிகச் சிறியதாகும். மூல பாடமாகிய கிரேக்கத்தில் இம்மடல் 335 சொற்களை மட்டுமே கொண்டுள்ளது. இதில் அதிகாரப் பிரிவுகள் இல்லை. மொத்தம் 25 வசனங்கள் மட்டுமே உண்டு. ஆசிரியர்புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களுள் பரிந்துரை மடலாக விளங்குவது பிலமோனுக்கு எழுதப்பட்ட திருமுகமாகும். அழகிய சொல்லாட்சியுடன் நளினமான முறையில் பவுல் இச்சிறு மடலை எழுதியுள்ளார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுகொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துக் கூறுகிறது[2]. இத்திருமுகம் நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளது. பழங்கால உரோமை, கிரேக்க இலக்கிய முறையில் இக்கடிதத்தில் வரும் பரிந்துரை அமைந்துள்ளது. எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்கொலோசை நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும் செல்வருமான பிலமோன் என்பவரிடம் ஒனேசிம் என்பவர் அடிமைத் தொழில் செய்துவந்தார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் தலைவரிடமிருந்து தப்பியோடிவிட்டார் (பில 18). இதற்கு உரோமைச் சட்டப்படி மரண தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒனேசிம் தம் தலைவரின் நண்பரான தூய பவுலை நாடி வந்தார்; சிறிது காலம் அவரோடு இருந்து கிறிஸ்தவராகிய பின்னர் தம் தலைவரிடம் திரும்பிச் செல்ல விழைந்தார். அப்போது பவுல், பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஓர் அடிமையாக அல்ல, ஒரு சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். இக்கடிதத்தைப் பவுல் கி.பி. 61ஆம் ஆண்டு உரோமைச் சிறையிலிருந்து எழுதினார் என்பது மரபுக் கருத்து. எனினும் இதனை அவர் தம் மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது எபேசிலிருந்து எழுதியிருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் இம்மடல் கி.பி. 53-56 அளவில் எழுதப்பட்டது. பிலமோன் திருமுகமும் அடிமைத்தனமூம்பவுல் ஒரு தனி ஆளுக்கு எழுதியதாக அமைந்தது பிலமோன் திருமுகம். தம் நண்பரான பிலமோன் நடந்ததை மறந்துவிட்டு, ஓடிப்போன அடிமையாகிய ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் பரிந்துரையை பவுல் முன்வைக்கின்றார். தனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு புதிய மனிதராக மாறிவிட்டிருந்தார் ஒனேசிமு. எனவே பவுல் "இனி ஒனேசிமுவை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்" என்று பிலமோனுக்கு எழுதுகிறார் (வசனம் 16). பவுல் பிலமோனின் முன்வைத்த கோரிக்கை என்ன? பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்க வேண்டுமா, விடுதலை செய்ய வேண்டுமா? ஒனேசிமுவை "சகோதரனாகவும்" "அடிமையாகவும்" ஏற்க வேண்டுமா? ஒனேசிமுவை மன்னித்து, மீண்டும் அவரைப் பவுலிடம் அனுப்பிவைக்க வேண்டுமா (காண்க: வசனங்கள் 14, 20)? கிறிஸ்தவராக மாறிவிட்ட ஒனேசிமு இனிமேல் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்று, "சகோதரராக" மாறிவிட்டாரா? - இக்கேள்விகளுக்குத் தெளிவான, அறுதியான பதில் இத்திருமுகத்தில் இல்லை. பவுல் வாழ்ந்த காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டில் அடிமைகளை வாங்குவதும் விற்பதும் வழக்கமாய் இருந்தது. கிரேக்க மற்றும் உரோமை கலாச்சாரங்கள் அடிமைத்தனத்தை ஏற்றிருந்தன. அடிமைகள் மனித மாண்போடு நடத்தப்படவில்லை, மாறாக, விற்பனைப் பொருள்போலவே கருதப்பட்டார்கள். அந்தச் சமூக வழக்கத்தைத் தூய பவுல் கேள்விக்கு உட்படுத்தவில்லை; கண்டனம் செய்யவில்லை. ஆயினும் அடிமைத்தனம் என்னும் சமூக அநீதியை ஒழிப்பதற்கான அடித்தளம் இம்மடலில் உள்ளது. அடிமை-எசமான் உறவு மாறவில்லை என்றாலும் அவர்கள் இருவருமே இயேசு கிறிஸ்துவில் உடன்பிறப்புகள் என்னும் உறவால் பிணைந்திருக்கிறார்கள்; எனவே, அந்த அன்புப் பிணைப்பு சகோதர, சமத்துவ நிலையின் அடித்தளத்தில் அமைய வேண்டும். இந்த உண்மையைப் பவுல் பிலமோனுக்கு உணர்த்தினார். 16ஆம் நூற்றாண்டிலும் அதன் பிறகும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் அடிமைகளை வாங்கி விற்று மிகுந்த ஆதாயம் ஈட்டின. அப்போது, கிறிஸ்தவம் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா என்னும் விவாதம் எழுந்தது. அடிமைத்தனம் கிறிஸ்தவ போதனைக்கு எதிரானது என்று வாதாடியவர்களும், அடிமைத்தனத்தை ஆதரித்தவர்களும் பிலமோன் திருமுகத்தை மேற்கோள் காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பகுதிபிலமோன் 8-21 "நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட,
உட்பிரிவுகள்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia