பிலமோன் (புதிய ஏற்பாட்டு நபர்)

புனிதர்கள் பிலமோன் மற்றும் அப்பியா
திருத்தூதர் (மரபுவழி திருக்கபைகள்)
மறைசாட்சி (இலத்தீன் வழிபாட்டி ரீதி)
இறப்பு68
கொலேசை, பிரைகியா
வணங்கும் திருஅவைகள்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
லூதரனியம்
திருவிழா22 நவம்பர்

பிலமோன் (/fɪˈlmən, f-/; கிரேக்க மொழி: Φιλήμων) என்பவர் அனத்தோலியாவில் வாழ்ந்த துவக்ககால கிறித்தவர்களுள் ஒருவரும் புதிய ஏற்பாட்டு நூலான திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்தின் பெறுநரும் ஆவார். இவரது மனைவி அப்பியா என்பது மரபு.[1]

கொலோசை நகரத்தவரான இவர் செல்வந்தரும் அந்த நகரில் திருப்பட்டம் பெற்றவரும் ஆவார் (ஆயராக இருக்கலாம்[2]). இவரின் வீட்டிலேயே திருச்சபை கூடியது என பவுல் குறிக்கின்றார்.[3] இவரிடமிருந்து தப்பியோடிய ஒனேசிமை மன்னித்து ஏற்கும்படி பவுல் இவருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதினார்.

நீரோ மன்னர் நிகழ்த்திய கொடுமைகளின்போது இவர் அப்பியா, ஒனேசிம் மற்றும் அர்க்கிப்புவோடு கொல்லப்பட்டார் என்பர்.

தயர் நகரின் தொரோதியுஸ் இவரை எழுபது சீடர்களில் ஒருவராகவும் காசா நகரின் ஆயராகவும் குறிக்கின்றார்.

மேற்கோள்கள்

  1.   "Philemon". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2. Const. Apost., VI, 46
  3. பிலமோன் 1:1-2
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya